இரவு பகல் எல்லா நேரங்களிலும் இரும்பிட்டே இருக்கீங்களா? உஷார் ஆபத்து காத்திருக்கு!!

Photo of author

By Divya

இரவு பகல் எல்லா நேரங்களிலும் இரும்பிட்டே இருக்கீங்களா? உஷார் ஆபத்து காத்திருக்கு!!

Divya

குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவருக்கும் வரக் கூடிய ஒரு பொதுவான பாதிப்பாக இருமல் இருக்கிறது.மழை மற்றும் குளிர்காலங்களில் தான் பெரும்பாலான மக்கள் இந்த இன்னலை சந்திக்கின்றனர்.

சளி அல்லது காய்ச்சலின் போது இந்த பாதிப்புகள் வருகிறது.சில சமயம் சளி,காய்ச்சல் இல்லாமல் வெறும் வறட்டு இருமல் மட்டும் சிலருக்கு ஏற்படும்.இருமல் பொதுவான பாதிப்பு என்பதால் அதை சாதாரணமாக எண்ணி அனைவரும் கடக்கின்றோம்.ஆனால் பெரிய நோய்களுக்கு முக்கிய அறிகுறியே இந்த இருமல் தான் மக்களே.

புற்றுநோய்,நுரையீரல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் இருந்தால் எந்நேரமும் லொக்கு லொக்கு என்று இருமல் வந்து கொண்டே இருக்கும்.புகைப்பிடிப்பவர்களுக்கு குபீர் இருமல் வரும்.இருமல் ஒன்று தான் என்றாலும் எதனால் இவை ஏற்படுகிறது என்பதை நாம் நிச்சயம் கவனிக்க வேண்டும்.

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது இந்த இருமல் பாதிப்பு வரும்.அதேபோல் சுவாசப்பாதையில் தொற்று இருந்தால் தொடர்ந்து இருமல் வந்து கொண்டே இருக்கும்.ஒவ்வாமை,தூசி போன்ற காரணங்களால் சுவாசப் பாதை பாதிப்படையும் பொழுது இருமல் வரலாம்.

நாம் அனுபவிக்கும் இருமல் எத்தனை நாட்கள் நீடிக்கிறது என்பதை நாம் முதலில் அறிய வேண்டும்.சளி அல்லது காய்ச்சலுடன் இருமல் இருந்தால் அவை ஓரிரு வாரங்களில் குணமாகிவிடும்.

உங்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இல்லாமல் வெறும் இருமல் மட்டும் வருகிறது என்றால் அது ஆஸ்துமா பாதிப்பு இருப்பதை உணர்த்துகிறது.உங்களுக்கு நீண்ட காலமாக இருமல் வருகிறது என்றால் அது நுரையீரல் சம்மந்தபட்ட பிரச்சனைக்கான அறிகுறியாக இருக்கக் கூடும்.

உங்களுக்கு பல மாதங்களாக காய்ச்சலுடன் இருமலும் இருக்கிறது என்றால் அது கொடிய காச நோய் இருப்பதற்கான அறிகுறியாகும்.இந்த அறிகுறி இருந்தால் நீங்கள் உடனே மருத்துவரை அணுகி தீர்வு காண வேண்டும்.

இருமலின் போது சோர்வு,உடல் பலவீனம் இருந்தால் சுவாசப் பாதையில் தொற்று இருப்பதற்கான அறிகுறியாகும்.உங்களுக்கு தொடர் கடும் இருமல் பிரச்சனை இருந்தால் அது நிமோனியா பாதிப்பாக இருக்கலாம்.அதேபோல் சிலருக்கு இருமலுடன் தொண்டை அரிப்பு,தொண்டை எரிச்சல்,தொண்டை கரகரப்பு போன்ற பாதிப்புகள் இருக்கலாம்.இது கக்குவான்,ஆஸ்துமா போன்ற பாதிப்பை உறுதி செய்கிறது.எந்த வகை இருமலாக இருந்தாலும் மருத்துவரை அணுகி அதற்கு தகுந்த வைத்தியம் செய்து கொள்வது தான் தங்களுக்கு நல்லது.