சர்க்கரை நோயாளிகளே உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க இதை மட்டும் சாப்பிடுங்கள்!! மருந்து மாத்திரை இல்லாத அற்புத வழி!!

Photo of author

By Divya

சர்க்கரை நோயாளிகளே உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க இதை மட்டும் சாப்பிடுங்கள்!! மருந்து மாத்திரை இல்லாத அற்புத வழி!!

Divya

தற்பொழுது நாம் பின்பற்றி கொண்டிருக்கும் உணவுமுறை பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால் நீரிழிவு நோய் பாதிப்பு எளிதில் உடலுக்குள் ஊடுருவிவிடுகிறது.இந்த நீரிழிவு நோய் பாதிப்பை முழுமையாக குணப்படுத்த முடியாது முடியாது என்றாலும் அதை வாழ்நாள் முழுவதும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது ரொம்ப முக்கியமான ஒன்று.

நாம் உட்கொள்ளும் உணவு உடலுக்குள் சர்க்கரையாக மாற்றப்படுகிறது.இந்த சர்க்கரையை உடலில் உள்ள இருக்கின்ற திசுக்கள் அனைத்திற்கும் எடுத்தும் செல்லும் பணியை இன்சுலின் எனும் ஹார்மோன் சுரப்பி செய்கிறது.இந்த ஹார்மோன் கணையத்தில் சுரக்கிறது.

அப்படி இருக்கையில் இந்த இன்சுலின் சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை என்றால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.இதை தான் நாம் சர்க்கரை நோய் என்று அழைக்கின்றோம்.இந்த இன்சலின் சுரப்பை அதிகரிக்க நாம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் உணவுகள்:

1)வெந்தயம்

இதில் இருக்கின்ற அமினோ அமிலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது.தினமும் காலையில் ஒரு கிளாஸ் வெந்தய நீர் பருகி வந்தால் உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும்.

2)பாகற்காய்

தினசரி காலை நேரத்தில் ஒரு கிளாஸ் பாகற்காய் சாறு பருகி வந்தால் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும்.

3)இலவங்கப்பட்டை

இந்த இலவங்கப்பட்டையில் இயற்கையாகவே இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் ஆற்றல் நிறைந்திருக்கிறது.தினமும் ஒரு கிளாஸ் இலவங்கப்பட்டை பானம் செய்து பருகி வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

4)மஞ்சள் தூள்

மஞ்சளில் இருக்கின்ற குர்குமின் என்ற வேதிப்பொருள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

5)மத்தி மீன்

இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

6)பாதாம் பருப்பு

தினமும் ஐந்து பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

7)கோவைக்காய்

நார்ச்சத்து நிறைந்த கோவைக்காய் உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.கோவைக்காய் ஜூஸ் செய்து பருகி வந்தால் மாத்திரை இன்றி இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

8)நாவல் விதை

இந்த விதையை பொடித்து காய வைத்து தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

9)கொய்யா

தினமும் ஒரு பச்சை கொய்யா சாப்பிட்டு வந்தால் கணையத்தில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும்.அதேபோல் கொய்யா இலை தேநீர் பருகி வந்தாலும் பலன் கிடைக்கும்.

10)ஆப்பிள் சீடர் வினிகர்

ஒரு கிளாஸ் தண்ணீர் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.