ஆண்,பெண் சிறுநீரகம் சார்ந்த பாதிப்புகளை தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர்.சிறுநீர் பாதையில் எரிச்சல்,சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுதல்,சிறுநீர் பாதியில் புண்கள் போன்ற காரணங்களால் அவதியடைபவர்கள் அதை அலட்சியம் செய்யக் கூடாது.
40 வயதிற்கு பிறகு ஆண்கள் பலர் இந்த சிறுநீரகப் பிரச்சனையை சந்திக்க தொடங்குகின்றனர்.இந்த பாதிப்பு ஏற்பட புராஸ்டேட் எனும் சுரப்பி தான் முக்கிய காரணம்.சிறுநீரக பாதையில் ஏற்படும் எரிச்சலை குணப்படுத்த இங்கு சொல்லப்பட்டுள்ள வீட்டு மருத்துவத்தை செய்யுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)சின்ன வெங்காயம் – ஐந்து
2)மிளகு – பத்து
3)தயிர் – கால் கப்
செய்முறை விளக்கம்:-
1.முதலில் ஐந்து சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு இதை தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
2.அடுத்து பத்து கருப்பு மிளகை உரலில் போட்டு இடித்து தூளாக்கி கொள்ள வேண்டும்.பிறகு ஒரு கிண்ணத்தில் 100 மில்லி கெட்டி தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
3.இதன் பிறகு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.
4.அதன் பிறகு இடித்த மிளகுத் தூளை அதில் போட்டு மிக்ஸ் செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் பாதை எரிச்சல் குணமாகும்.
5.அதேபோல் ஒரு கிளாஸ் தண்ணீரில் வெங்காயத்தை இடித்து போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் சிறுநீர் பாதையில் தேங்கிய கழிவுகள் வெளியேறும்.
தேவையான பொருட்கள்:-
1)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
1.அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
2அதன் பிறகு ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை அதில் கொட்டி குறைவான தீயில் இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க வைக்க வேண்டும்.
3.பின்னர் இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் சிறுநீர் பாதை எரிச்சல் குணமாகும்.இந்த மஞ்சள் பானத்தில் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம்.