குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் தின்பண்டமாக இருப்பது பிஸ்கட்.தண்ணீர்,தேநீர்,பால் என்று இதை தொட்டு சாப்பிடும் பழக்கத்தை பலர் கொண்டிருக்கின்றனர்.
மைதா,கோதுமை,சர்க்கரை,உப்பு போன்றவற்றை கொண்டு பிஸ்கட் தயாரிக்கப்படுகிறது.சிலர் மைதா பிஸ்கட் கெடுதல் என்று கோதுமை பிஸ்கட்டை சாப்பிடுகின்றனர்.ஆனால் உண்மையில் அனைத்து பிஸ்கட்டுகளும் நமக்கு கெடுதல் தரக் கூடியவை தான்.டால்டா,பாமாயில் கொண்டு தயாரிக்கப்படும் பிஸ்கட் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்துவிடும்.
சிலர் இனிப்பு குறைவான பிராண்ட் பிஸ்கட் சாப்பிடுகின்றனர்.ஆனால் உண்மையில் அதுவும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் தரக் கூடியவை தான் என்பதை நாம் உணர வேண்டும்.
க்ரீம் பிஸ்கட்,கோதுமை பிஸ்கட்,மைதா பிஸ்கட் போன்றவை நமது உடல் ஆரோக்கியத்தை பெருமளவில் பாதிக்கிறது.இந்த பிஸ்கட்டுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்படக் கூடும்.
தொடர்ந்து பிஸ்கட் சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை ஏற்படும்.பிஸ்கட்டில் குளுட்டன்,சுக்ரோஸ்,ஈஸ்ட்,சோடியம்,சர்க்கரை போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகிறது.சுக்ரோஸ் நிறைந்த பிஸ்கட்டை சாப்பிட்டால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.
சோடியம் அதிகமுள்ள பிஸ்கட்டுகளை சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டுவிடும்.பிஸ்கட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை போன்றவை ஏற்படும்.சிலருக்கு பிஸ்கட் சாப்பிடுவதால் பசியின்மை பிரச்சனை அதிகரிக்கும்.அனைத்து பிஸ்கட்களிலும் மாவுச்சத்து மற்றும் கலோரிகள் அதிகம் இருக்கிறது.
சில சர்க்கரை நோயாளிகள் மேரிகோல்ட் பிஸ்கட் நல்லது என்று சாப்பிடுகின்றனர்.ஆனால் உண்மையில் மேரிகோல்ட் பிஸ்கட்டில் வெறும் மைதா,கோதுமை சர்க்கரை மட்டுமே உள்ளது.இவை இரத்த சர்க்கரை அதிகரிக்கும் தன்மை கொண்டது.சிலர் நியூட்டரி சாய்ஸ் பிஸ்கட் உடலுக்கு நல்லது என்று நினைத்து சாப்பிடுகின்றனர்.ஆனால் ஒரு க்ரீம் பிஸ்கட் போன்றே இந்த பிஸ்கட்டும் உடல் ஆரோக்கியத்தை தீங்குவிளைவிக்க கூடியது தான்.ஆகவே எந்த பிராண்ட் பிஸ்கட்டாக இருந்தாலும் அதை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.