வைட்டமின் சி சத்து நிறைந்த எலுமிச்சை பழத்தில் ஜூஸ் அல்லது டீ செய்து பருகி வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.
எலுமிச்சை ஜூஸ் பருவதால் நாம் பெறும் நன்மைகள்:
1)உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இதயம் சம்மந்தபட்ட பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.
2)சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்கும் ஆற்றல் எலுமிச்சைக்கு உண்டு.தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு பருகி வந்தால் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.
3)அஜீரணக் கோளாறு இருப்பவர்கள் இந்த எலுமிச்சை சாறு பருகுவதால் பிரச்சனைக்கு உண்டான தீர்வு கிடைக்கும்.
4)உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைய தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு பருக வேண்டும்.
5)உடலில் படிந்துள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்ற எலுமிச்சை ஜூஸ் செய்து பருகலாம்.மன அழுத்தம் குறைய தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.
6)வாய் தொடர்பான பிரச்சனைகளுக்கு எலுமிச்சை சாறு தீர்வாக இருக்கிறது.தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை தேநீர் பருகி வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
7)உடலில் பிஹெச் அளவு சமநிலையில் இருக்க எலுமிச்சை பானம் செய்து பருகலாம்.காலை நேரத்தில் ஒரு கிளாஸ் எலுமிச்சை பானம் பருகினால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.
8)வாந்தி,குமட்டல் போன்ற பிரச்சனைகளை எலுமிச்சை சாறு குணப்படுத்துகிறது.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக எலுமிச்சை பானம் பருகலாம்.
9)உடலில் உள்ள பித்தத்தை குறைக்கும் மூலிகை பானமாக எலுமிச்சை நீர் உள்ளது.தலைவலி உள்ளவர்கள் ஒரு கிளாஸ் எலுமிச்சை பானம் பருகினால் உரிய பலன் கிடைக்கும்.
10)வாய்ப்புண் பிரச்சனை,உடல் சோர்வு போன்றவற்றை சரி செய்ய எலுமிச்சை பானம் செய்து பருகலாம்.