பருவத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஹார்மோன் மாற்றத்தை சரி செய்ய இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

Photo of author

By Divya

பருவத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஹார்மோன் மாற்றத்தை சரி செய்ய இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

Divya

பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தில் அதிகமான பெண்கள் முகப்பரு மற்றும் உடலில் சில மாற்றங்களை எதிர்கொள்கின்றனர்.சிலருக்கு மாதவிடாய் சுழற்சி சீரற்று இருக்கும்.சிலருக்கு PCOS,PCOD பிரச்சனை இருக்கும்.இதற்கு ஹார்மோன் சமநிலையின்மை தான் காரணம்.இந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்கான தீர்வுகள் இங்கு தரப்பட்டுள்ளது.

தீர்வு 01:

மஞ்சள் பால்

பசும் பாலை காய்ச்சி மஞ்சள் தூள் சிறிதளவு கலந்து குடித்து வந்தால் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனை சரியாகும்.ஹார்மோன் மாற்றத்தால் முகத்தில் வரும் பருக்களை மஞ்சள் பால் குடித்து மறைய வைக்கலாம்.

தீர்வு 02:

நெல்லி சாறு

ஹார்மோன் ஏற்றத்தாழ்வால் பெண்கள் முறையற்ற மாதவிடாய் பிரச்சனையை சந்திக்கின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து மீள பெண்கள் பெரிய நெல்லிக்காய் ஜூஸ் பருகலாம்.இதில் இருக்கின்ற வைட்டமின் சி மற்றும் நோய் எதிர்ப்பு பண்புகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

தீர்வு 03:

வெந்தய தேநீர்

உடலில் ஹார்மோனை சமநிலை படுத்தும் ஆற்றல் வெந்தயத்திற்கு இருக்கிறது.இந்த வெந்தயத்தை கொண்டு டீ செய்து பருகி வந்தால் மாதவிடாய் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

தீர்வு 04:

அஸ்வகந்தா தேநீர்

நாட்டு மருந்து கடையில் அஸ்வகந்தா கிடைக்கும்.இதை சூரணமாக வாங்கிக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு கிளாஸ் அளவு தண்ணீரில் ஒரு தேக்கரண்டி அஸ்வகந்தா சூரணம் சேர்த்து கொதிக்க வைத்து பருகினால் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு சரியாகும்.

தீர்வு 05:

ஆப்பிள் சீடர் வினிகர் பானம்

பெண்கள் சந்திக்கும் PCOS,PCOD பிரச்சனை சரியாக ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீரில் கலந்து பருகலாம்.

தீர்வு 06:

புதினா பானம்

நான்கு அல்லது ஐந்து புதினா இலைகளை பாத்திரத்தில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடித்து தேன் கலந்து பருகி வந்தால் PCOS,PCOD பாதிப்பு குணமாகும்.

தீர்வு 06:

பட்டை தேநீர்

இலவங்கப்பட்டையை பொடித்து ஒரு கிளாஸ் அளவு தண்ணீரில் கொட்டி கொதிக்க வைத்து குடித்தால் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சனை சரியாகும்.