ஆண்களுக்கு விந்தணு குறைபாடு அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது.இந்த விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவான இருக்கும் ஆண்கள் மூலம் கருவுறுதல் நடைபெற வைப்பது எளிதான விஷயம் அல்ல.
இன்றைய காலத்தில் குழந்தையின்மை பிரச்சனை அதிகரிக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.இந்த பிரச்சனையில் இருந்து மீள நாட்டு மருந்து கடையில் விற்கும் ஓரிதழ் தாமரை பொடியை வாங்கி பசும் பாலில் கலந்து குடிங்க.
ஆண்களின் விந்தணு தரம் குறைய காரணங்கள்:
1.மது மற்றும் புகைப்பழக்கம்
2.மன அழுத்தம்
3.ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கைமுறை
4.அதிகமாக செல்போன் பயன்படுத்துதல்
5.உடல் பருமன்
6.மோசமான வாழ்க்கை முறை
விந்தணு தரத்தை உயர்த்தும் ஓரிதழ் தாமரை பால்:
தேவையான பொருட்கள்:-
1)ஓரிதழ் தாமரை பொடி – ஒரு தேக்கரண்டி
2)பசும் பால் – ஒரு கிளாஸ்
3)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் ஓரிதழ் தாமரை பொடியை வாங்கிக் கொள்ளுங்கள்.இந்த ஓரிதழ் தாமரை பொடியை 100 அளவிற்கு வாங்கிக் கொள்ளுங்கள்.
பிறகு இந்த பொடியை ஈரமில்லாத ஒரு டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.அதன் பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்துங்கள்.
பிறகு அதில் ஒரு தேக்கரண்டி அளவு ஓரிதழ் தாமரை பொடி சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வையுங்கள்.பிறகு இந்த பாலை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகுங்கள்.
இந்த ஓரிதழ் தாமரை பால் ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது.விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் அசைவுத் தன்மையை அதிகரிக்க இந்த ஓரிதழ் தாமரை பால் பருகலாம்.
ஓரிதழ் தாமரை பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும்.விந்தணுக்களின் தரத்தை உயர்த்த விரும்பும் ஆண்களுக்கு ஓரிதழ் தாமரை பால் நிச்சயம் கைகொடுக்கும்.