வாழ்நாள் முழுவதும் நம்மை விட்டு அகலாத நோய்களில் சர்க்கரை அதாவது நீரிழிவு நோயும் ஒன்று.இந்த நீரிழிவு நோய் பாதிப்பு தற்பொழுது சாதாரணமாகிவிட்டது.வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட காரணமே உணவுமுறை பழக்கம் தான்.
நம்மால் ஏற்படும் சிறு தவறுகள் கூட சர்க்கரை நோய்க்கு வழிவகுத்துவிடும்.இனிப்பு உணவுகளை குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.இந்த இனிப்பு தான் சர்க்கரை நோய்க்கு முதன்மை காரணமாக இருக்கிறது.
நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பவர்கள் அதை கட்டுக்குள் வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.நீரிழிவு நோய் இருப்பவர்கள் அனைத்து உணவுகளையும் ருசிக்க முடியாது.காரணம் அவை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை வெகு விரைவில் உயர்த்திவிடும்.
எனவே நாம் ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் நல்ல வாழ்க்கை முறையை பின்பற்றினால் மட்டுமே வாழ்நாள் முழுவதும் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
சர்க்கரை நோய் உருவாக காரணங்கள்:
**இனிப்பு உணவுகளை உட்கொள்ளுதல்
**வயது முதுமை
**குடும்பத் தன்மை
**மோசமான உணவுப் பழக்கம்
சர்க்கரை நோய் அறிகுறிகள்:
**அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு
**கை,கால் மரத்து போதல்
**சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனை
**அடிபட்ட காயங்கள் ஆறாமல் இருத்தல்
**மயக்க உணர்வு
நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சாப்பிட வேண்டிய [பழங்கள்:
1)கருப்பு திராட்சை
உலர்ந்த கருப்பு திராட்சையில் நார்ச்சத்து அதிகம் நிறைந்து காணப்படுகிறது.இந்த உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை சர்க்கரை கட்டுப்படுவதோடு உடல் ஆரோக்கியம் மேம்படும்.
2)பாதாமி
அயல் நாட்டு பழவகையான பாதாமி இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.இந்த பாதாமி பழத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்கும் பண்புகள் நிறைய உள்ளன.பாதாமி பழம்,பாதாமி பொடி என்று எப்படி சாப்பிட்டாலும் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
3)மல்பெரி
சுவை மிகுந்த பழமான மல்பெரியில் பொட்டாசியம்,வைட்டமின்கள்,இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த மல்பெரி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.அதேபோல் பச்சை கொய்யா,நாவல் போன்ற பழங்களை சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை கட்டுப்படும்.