இந்த ஒரு சின்ன தவறால் தான் உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் வருதாம்!! என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!!

Photo of author

By Divya

இந்த ஒரு சின்ன தவறால் தான் உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் வருதாம்!! என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!!

Divya

உங்களில் சிலர் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். உடல் கழிவுகளை அப்புறப்படுத்தும் சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அடிக்கடி சிறுநீர் வெளியேறும்.சிலர் உரிய நேரத்தில் தண்ணீர் அருந்த மாட்டார்கள்.இதனால் அவர்களின் சிறுநீர் பாதையில் கிருமி மற்றும் நோய் தொற்று அதிகரித்து சிறுநீர் கழிக்கும் பொழுது மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும்.

சிலர் சிறுநீர் வரும் பொழுது அவற்றை கழிக்காமல் அடக்கி வைத்துக் கொண்டு இருப்பார்கள்.சிலர் நாள் முழுவதும் சிறுநீர் வெளியேற்றாமல் இருப்பார்கள்.இதனால் பின்னாளில் கடுமையான பக்க விளைவுகளை தாங்கள் சந்திக்க நேரிடும்.

தண்ணீர் குடிக்காமை சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட காரணம் என்றாலும் தண்ணீர் பருகிய பிறகு சிறுநீரை அடக்கி வைப்பது சிறுநீரக செயலிழப்பு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது.

அடிக்கடி சிறுநீர் கழிக்க காரணங்கள்:-

1)திரவ உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுதல்

2)மது பழக்கம்

3)காபி,டீ அதிகமாக எடுத்துக் கொள்ளுதல்

4)நீரிழிவு நோய் பாதிப்பு

5)சிறுநீர் பாதை தொற்று

6)பிறப்புறுப்பு நோய்தொற்று

அடிக்கடி சிறுநீர் வெளியேறுவதன் அறிகுறி:

1)அடக்க முடியாத சிறுநீர் வெளியேற்றம்

2)இரவு நேரத்தில் அதிக சிறுநீர் வெளியேற்றம்

3)சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் மற்றும் வலி உணர்வு

4)சிறுநீர் நிறம் மாற்றம்

5)சிறுநீர் வெளியேற்றுவதில் சிரமம்

6)துர்நாற்றத்துடன் சிறுநீர் வெளியேறுதல்

தற்பொழுது சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை பலரும் அனுபவித்து வருவதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டியது முக்கியமான விஷயமாக இருக்கிறது.நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல்,உரிய நேரத்தில் சிறுநீர் கழித்தல்,சிறுநீர் வெளியேற்ற பிறகு பிறப்புறுப்பு பகுதியை சுத்தம் செய்தல் போன்றவற்றை முறையாக பின்பற்றி வந்தால் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.

உங்களுக்கு சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனை தீவிரமான கட்டத்தில் இருந்தால் அலட்சியம் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.