அதிகரிக்கும் உடல் எடையை உங்களால் கட்டுப்படுத்தவே முடியலையா? இந்த மிஸ்டேக்ஸ் இனியும் செய்யாதீங்க!!

Photo of author

By Divya

அதிகரிக்கும் உடல் எடையை உங்களால் கட்டுப்படுத்தவே முடியலையா? இந்த மிஸ்டேக்ஸ் இனியும் செய்யாதீங்க!!

Divya

இந்த காலத்தில் பெரும்பாலான நோய்களுக்கு மூலக் காரணமாக உடல் பருமன் இருக்கிறது.இன்றைய தலைமுறையினரால் தங்கள் உடல் எடையை கட்டுப்படுத்தவே முடியவில்லை.பெரும்பாலானோர் தங்கள் உடல் எடையை குறைந்த காலத்தில் கட்டுப்படுத்த எண்ணி மோசமான டயட் மற்றும் ஆபத்தான உடற்பயிற்சிகளை செய்கின்றனர்.

சிலர் சில காலங்கள் மட்டுமே டயட்டை பின்பற்றுகின்றனர்.சிலர் டயட்டை பின்பற்றினாலும் கூடவே பொரித்த,வறுத்த உணவுகளையும் உட்கொண்டு உடல் எடை கூடிய பிறகு வருத்தப்படுகின்றனர்.

கிராமங்களைவிட நகரங்களில் தான் உடல் பருமன் பிரச்சனை அதிகரித்து காணப்படுகிறது.பெரும்பாலான நகர மக்கள் உட்கார்ந்த நிலை வாழ்க்கை முறையை பின்பற்றுகின்றனர்.இதனோடு ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உட்கொள்கின்றனர்.சிலர் அமர்ந்த இடத்தில் இருந்தபடி உணவு ஆர்டர் செய்து உண்ணும் பழக்கம் பெருகிவருகிறது.

சிலர் உடல் எடையை குறைக்க குறைவான அளவு உணவு உட்கொள்கின்றனர்.இருப்பினும் அவை ஆரோக்கியம் இல்லாத உணவாக இருந்தால் உடல் பருமனுக்கு வழிவகுத்துவிடும்.பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்துவிடும்.

அதேபோல் எண்ணையில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து உடல் பருமனுக்கு வழிவகுத்துவிடும்.நாம் பின்பற்றும் டயட் ஆரோக்யமானதாகவும் நமக்கு பிடித்தவையாக இருந்தால் உடலில் கொழுப்பு சேர்வது கட்டுப்படும்.

நாள் ஒன்றில் சிறிது நேரமாவது உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும்.எளிய உடற்பயிற்சி,நடைபயிற்சி,தியானம்,யோகா போன்றவற்றை செய்ய வேண்டும்.ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடாமல் அதை பிரித்து இரண்டு வேளை அல்லது மூன்று வேளையாக சாப்பிடலாம்.சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.ஜங்க் புட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.கலோரி மற்றும் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.உடல் எடையை கட்டுப்படுத்த நார்ச்சத்து நிறைந்த உணவு அவசியமாக திகழ்கிறது.