ஏற்காடு மலைப்பகுதியில் கண்டெடுத்த இளம்பெண் சடலம் தொடர்பான வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. திருச்சியை சேர்ந்த லோகாம்பிகை என்கிற இளம்பெண் சேலம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 4 நாட்களாக அவரை காணவில்லை. மேலும், அவரின் செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. எனவே, விடுதி வார்டன் சேலம் பள்ளப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இளம்பெண்ணின் செல்போனை ஆராயந்ததில் அவரின் செல்போன் சிக்னல் கடைசியாக ஏற்காட்டில் கட் ஆகியிருந்தது. அதோடு, அவரிடம் கடைசியாக திருச்சியை சேர்ந்த வாலிபர் ஒரு பேசியதும் தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரணை செய்ததில் அந்த பெண்ணை குளிர் பானத்தில் விஷயம் கலந்து கொடுத்து கொலை செய்தேன், உடலில் விஷ ஊசி செலுத்தினேன், ஏற்காடு மலையிலிருந்து தள்ளிவிட்டேன் என மாறி மாறி சொல்லியிருக்கிறார்.
அவர் சொன்ன இடத்திலிருந்து இளம்பெண்ணின் உடலை போலீசார் மீட்டுள்ளனர். அந்த இளைஞரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். இந்நிலையில், அந்த இளைஞர் அப்துல் ஹபீஸுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயம் லோகநாயகிக்கு தெரிய வர அவருடன் தகராறு செய்திருக்கிறார்.
எனவேதான் அவரை ஏற்காடு அழைத்து சென்று கொலை செய்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. இதற்கு அவருக்கு 2 இளம்பெண்களும் அவருக்கு உதவியிருக்கிறார்கள் எனத்தெரிகிறது. அந்த 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட வாலிபர் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.