உலக மக்கள் உட்கொள்ளும் மதுபானங்களில் ஒன்று பீர்.இந்த பானம் கோதுமை,அரிசி,சோளம்,பார்லி போன்ற தானியங்களின் மாவுப் பொருட்களை நொதிக்க வைப்பதன் மூலம் கிடைக்கிறது.
மற்ற மதுபானங்களை விட பீரில் தீமைகள் குறைவு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் உண்மையில் பீர் உடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்.
பீர் குடிப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்:-
1)ஒருவர் தொடர்ந்து பீர் குடித்து வந்தால் அவரின் இதயத் துடிப்பு சீரற்று போகும்.அதிகளவு பீர் குடித்தால் இரத்தக்கொதிப்பு பிரச்சனை ஏற்படும்.
2)பீர் குடிப்பதை வழக்கமாக்கி கொண்டவர்களுக்கு இருதய நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
3)அதிகளவு பீர் குடித்தால் மயக்கம்,படபடப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.குடிப்பழக்கத்திற்கு அடிமையானால் கல்லீரல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும்.
4)பீருக்கு அடிமையானால் சொரியாசிஸ் பாதிப்பு வரலாம்.தொடர்ந்து பீர் குடித்தால் கெட்ட கொழுப்பு அதிகரித்து தொப்பை உருவாகிவிடும்.
5)பீர் குடிப்பதால் கண்களை சுற்றி கருவளையம் உருவாகும்.முகம் சிவந்து போகும்.
6)அதிகமாக பீர் குடிக்கும் ஆண்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கிறது.பீர் குடித்தால் மூளை செல்கள் கடுமையான பாதிப்பை சந்திக்கும்.தினமும் பீர் குடித்தால் உடலில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் பற்றாக்குறை ஏற்படும்.
7)பீரில் உள்ள ஆல்கஹால் செரிமான அமைப்பை கடுமையாக பாதிக்கும்.தொடர்ந்து பீர் பருகுபவர்களுக்கு சிந்திக்கும் ஆற்றல் குறையும்.அதிகமாக பீர் குடித்தால் இதயம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
8)நாள்தோறும் பீர் குடிப்பவர்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு வர வாய்ப்பிருக்கிறது.உயர் இரத்த அழுத்தம்,பக்க வாதம் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
9)அதிகளவு பீர் குடித்தால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் முழுமையாக பாதிப்படையும்.சிறுநீரக கல்,சிறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்புகள் வர அதிக வாய்ப்பிருக்கிறது.
10)பீர் குடித்தால் உடலில் வைட்டமின் பற்றாக்குறை ஏற்படும்.இதனால் உடல் இயக்கத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.