நீர் உடம்பு இருக்கவங்க இதை செய்தால்.. ஒரு வாரத்தில் குண்டு உடலை மெலிய வைக்கலாம்!!

Photo of author

By Divya

நீர் உடம்பு இருக்கவங்க இதை செய்தால்.. ஒரு வாரத்தில் குண்டு உடலை மெலிய வைக்கலாம்!!

Divya

நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் நீர்ச்சத்து.நம் உடல் கிட்டத்தட்ட 60% நீரை கொண்டிருக்கிறது.

ஆனால் உடலில் நீர் அளவு அதிகமாக இருந்தால் எடை அதிகரித்துவிடும்.கொழுப்பு சதை உள்ள உடல் வேறு நீர் உடல் வேறு என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.நமது உடலில் சேகரமாகும் கழிவுகளை அகற்ற நீர் அவசியமான ஒன்றாக உள்ளது.

உணவு சேர்ப்பது முதல் உடல் கழிவுகளை அகற்றுவது வரை அனைத்திற்கும் நீர் அவசியமான விசயாமாக இருக்கிறது.அப்படி இருக்கையில் இந்த சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டால் கழிவுகள் உடலில் தேங்கி பருமனாக மாற்றிவிடும்.

நீர் உடம்பு எதனால் ஏற்படுகிறது?

பதப்படுத்தப்பட்ட உணவுமுறை பழக்கம்
தண்ணீர் அருந்தாமை
சோமேறி வாழ்க்கை முறை
உப்பு நிறைந்த உணவுகள்

நீர் உடலை குறைக்க வழிகள்:

1)குறைவான அளவு சோடியம் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும்.இதன் மூலம் உடலை சுறுசுறுப்பாக இயங்க வைத்து உடலில் உள்ள கழிவுகளை எளிதில் நீக்கிவிடலாம்.

2)தினமும் ஒரு வேகவைத்த முட்டையை சாப்பிட வேண்டும்.முட்டையில் இருக்கின்ற புரதம்,மெக்னீசியம்,பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் உடலில் உள்ள தேவையற்ற தண்ணீர் வெளியேற்ற உதவுகிறது.

3)தினமும் ஒரு வெள்ளைக்காய் ஜூஸ் பருகி வந்தால் உடலில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறிவிடும்.

4)மூங்கில் தண்டை சாப்பிடுவதால் உடலில் உள்ள சோடியம் அளவு குறையும்.இதனால் உடலில் தேங்கி இருக்கும் தேவையற்ற நீர் கழிவுகள் அகலும்.

5)தினமும் ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் பருகி வந்தால் உடலில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறும்.இதில் இருக்கின்ற பொட்டாசியம்,மெக்னீசியம் போன்ற சத்துக்கள் தேவையற்ற நீரை வெளியேற்ற உதவுகிறது.

6)தர்பூசணி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறும்.இஞ்சி பானத்தை பருகி வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான நீர் வெளியேறும்.

7)வெண்ணெய் பழம்,அன்னாசி பழம்,கேரட் சாறு போன்றவை உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்ற உதவுகிறது.உலர் ஆப்ரிகார்ட்,ஊறவைத்த வைத்த பாதாம் போன்றவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கிய தேவையற்ற நீர் வெளியேறும்.