செவ்வாழைப்பழம் கர்ப்பிணிகளுக்கு நல்லதா? இந்த தகவலை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!!

Photo of author

By Divya

செவ்வாழைப்பழம் கர்ப்பிணிகளுக்கு நல்லதா? இந்த தகவலை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!!

Divya

பெண்களின் கர்ப்பகாலத்தில் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டியது மிகவும் முக்கியமான விஷயமாகும்.உணவுமுறையில் கவனம் செலுத்துவதால் தாய் மற்றும் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.

கர்ப்ப காலத்தில் பழங்கள்,காய்கறிகள்,கீரைகளை தினசரி எடுத்துக் கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.பழங்களில் செவ்வாழை கர்ப்பிணி பெண்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.

செவ்வாழை பழத்தில் பொட்டாசியம்,இரும்பு,மெக்னீசியம்,கால்சியம்,தயாமின்,போலிக் ஆசிட் மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு செவ்வாழை தரும் பயன்கள்:

கர்ப்பிணி பெண்கள் செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல் போன்றவற்றை எதிர்கொள்கின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து மீள தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் இரத்த சோகை பாதிப்பிற்கு ஆளாகாமல் இருக்க செவ்வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும்.வாந்தி,குமட்டல் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் செவ்வாழைப்பழத்தை சாப்பிடலாம்.

செவ்வாழைப்பழத்தில் இருக்கின்ற கால்சியம் சத்து கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.இதில் இருக்கின்ற கால்சியம் குழந்தையின் எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது.

செவ்வாழை பழத்தில் இருக்கின்ற போலிக் அமிலம் பிறவி குறைபாட்டை தடுக்கிறது.கர்ப்பிணி பெண்களில் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.செவ்வாழைப்பழத்தில் இருக்கின்ற பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

ஆனால் கர்ப்பகாலத்தில் நீரிழிவு பிரச்சனையை சந்தித்து வருபவர்கள் இந்த செவ்வாழைப் பழத்தை தவிர்ப்பது நல்லது.இது இரத்த சர்க்கரை அளவை உயர்த்திவிடும்.