உங்களில் பலர் கை கட்டை விரலில் மட்டும் அதிக வலியை அனுபவித்து வருவீர்கள்.அதற்கு காரணம் நீங்கள் அலட்சியமாக செயல்படுத்துவது தான்.சிலர் அதிக நேரம் மொபைல்,லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.இதன் விளைவாக கை கட்டை விரலில் வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.இந்த பாதிப்பை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்ளவில்லை என்றால் நிச்சயம் பெரிய பாதிப்புகளை சந்திக்க கூடும்.
கட்டை விரல் வலி ஏற்பட காரணங்கள்:
**வயது முதுமை
**உடல் பருமன்
**கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுக்கும் வேலைகள்
**பரம்பரைத் தன்மை
**கட்டை விரல் காயங்கள்
கட்டை விரல் வலி குறைய செய்ய வேண்டியவை:
தீர்வு:-
வெந்நீர் ஒத்தடம்
முதலில் சிறிதளவு தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள்.இதை அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.
அதன் பின்னர் அடுப்பை ஆப் செய்துவிட்டு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.சூடு பொறுக்கும் அளவிற்கு தண்ணீர் இருக்கும் பொழுது கை கட்டை விரலை அதில் வைத்து சிறிது நேரம் அழுத்தம் கொடுங்கள்.
அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் ஐஸ்கட்டி தண்ணீரை ஊற்றி வலி உள்ள கட்டை விரலை வைத்து மசாஜ் செய்யுங்கள்.இப்படி செய்தால் கட்டை விரல் வலி குறையும்.இந்த வெப்பம் மற்றும் குளிர் சிகிச்சை கட்டை விரல் வலியை குணப்படுத்த பெரிதும் உதவுகிறது.
இது தவிர கட்டை விரலுக்கு மென்மையான பயிற்சி கொடுக்க வேண்டும்.விரல்களுக்கு ஓய்வு கொடுப்பது மற்றும் கட்டை விரல் மூட்டு பகுதியை வலிமையாக்கும் பயிற்சிகள் செய்தல் போன்றவற்றின் மூலம் வலியை குறைக்கலாம்.
உங்களுக்கு கட்டை விரல் வலி தீவிரமாக இருக்கிறது என்றால் நீங்கள் நிச்சயம் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.வயதான பிறகு கட்டை விரல் வலி வருவது பொதுவான ஒன்று தான்.ஆனால் இளமை காலத்தில் கட்டை விரல் வலி இருந்தால் உரிய தீர்வு காண வேண்டியது முக்கியம்.