குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இனிப்பு பண்டம் கேக்.இந்த கேக் ஜங்க் புட்களில் ஒன்றாக திகழ்கிறது.பிறந்த நாள்,புத்தாண்டு,கிருத்துமஸ் போன்ற விழா கொண்டாட்டங்கள் கேக் இல்லாமல் முழுமை பெறாது.
இந்த கேக்கில் தற்பொழுது பல பிளேவர்கள் இருக்கிறது.ஹனி கேக்,சாக்லேட் கேக்,க்ரீம் கேக்,வெண்ணிலா கேக்,புரூட் கேக் என்று பல வெரைட்டிகளில் கேக் கிடைக்கிறது.இந்த கேக்குகள் இனிப்பு மற்றும் வாசனை நிறைந்திருப்பதால் பலரும் இதற்கு அடிமையாக இருக்கின்றனர்.
முன்பெல்லாம் கேக் பயன்பாடு என்பது குறைவாக இருந்தது.ஆனால் தற்பொழுது சின்ன கொண்டாட்டத்திற்கு கூட கேக் வெட்டுவது கலாச்சாரமாக மாறிவிட்டது.கேக்கை அளவிற்கு அதிகமாக உட்கொண்டால் அவை என்ன மாதிரியான தீங்கை ஏற்படுத்தும் என்பதை நாம் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.
கேக்கில் ஏகப்பட்ட இனிப்புகள் சேர்க்கப்படுகிறது.இந்த கேக்கை அளவிற்கு அதிகமாக உட்கொண்டால் அவை இரத்த சர்க்கரை அளவை உயர்த்தி சர்க்கரை நோய்க்கு வழிவகுத்துவிடும்.நீங்கள் சாப்பிடுவது கேக் இல்லை உங்கள் உடல் ஆரோக்கியத்தை நீங்களே வைத்துக் கொள்ளும் ஆப்பு.
கேக்கில் இருக்கின்ற கார்போ ஹைட்ரேட்க்கள் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்கிறது.சிறு வயதில் உடல் பருமன் ஏற்பட முக்கிய காரணமாக இது திகழ்கிறது.கேக்கில் சேர்க்கப்படும் அதிகப்படியான இனிப்புகள் இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை குறைத்துவிடும்.
இதனால் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடைந்து எளிதில் நோய் பாதிப்புகள் நம்மை அண்டிவிடுகிறது.கேக் தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் அதிக கொழுப்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது.கேக்கை அதிகமாக சாப்பிட்டால் இதய நோய் பாதிப்பு ஏற்படும்.
கேக்குகளில் சேர்க்கப்படும் நிறமூட்டிகள் செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும்.இதனால் மலச்சிக்கல்,உடல் பலவீனம்,மனம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.கேக் சாப்பிடுவதை தவிர்க்க முடியாதவர்கள் சர்க்கரை குறைந்த நிறமூட்டிகள் சேர்க்கப்படாத கேக்குகளை குறைந்த அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.