உங்களுக்கு கை கால் மரத்து போகுதா? பிரச்சனை குணமாக இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!!

Photo of author

By Divya

உங்களுக்கு கை கால் மரத்து போகுதா? பிரச்சனை குணமாக இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!!

Divya

நமது உடலில் இரத்த ஓட்டம் தடைபடும் பொழுது கை கால்கள் மரத்து போதல் பிரச்சனை ஏற்படுகிறது.இரத்த ஓட்டம் தடைபடுவதால் உடல் வலி,தசை பிடிப்பு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

அதேபோல் நரம்புகள் சம்மந்தபட்ட பிரச்சனைகள் ஏற்படும் பொழுது கை மற்றும் கால்கள் மரத்து போகும்.சிலருக்கு எப்பொழுதாவது கை கால்கள் மரத்து போதல் பிரச்சனை ஏற்படும்.ஆனால் சிலருக்கு அடிக்கடி கை கால் மரத்து பிரச்சனை ஏற்படும்.

அதேபோல் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருத்தல்,நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்பது போன்ற காரணங்களால் கை கால் மரத்து போதல் ஏற்படுகிறது.

கை கால் மரத்து போதல் காரணங்கள்:

1)வைட்டமின் பி12 குறைபாடு
2)நரம்பு அழுத்தம்
3)நரம்பு வீக்கம் மற்றும் நரம்பு வலி
4)நரம்பு எரிச்சல்
5)இரத்த சர்க்கரை நோய்
6)மரபணு கோளாறு
7)மருந்துகளின் பின்விளைவு
8)நரம்பு சேதம்
9)செரிமானக் கோளாறு

கை கால் மரத்து போதலை குணப்படுத்தும் உணவுகள்:-

கடலில் வாழும் மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்து காணப்படுகிறது.இந்த மீனை உட்கொண்டால் இரத்த ஓட்டம் சீராகும்.இதனால் கை கால் மரத்து போதல் பிரச்சனை ஏற்படுவது கட்டுப்படும்.

சிட்ரஸ் நிறைந்த பழங்களை உட்கொண்டால் இரத்த ஓட்டம் மேம்படும்.இதனால் கை கால் மரத்து போவது கட்டுப்படும்.

உலர் விதைகளை உட்கொண்டால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.உலர் விதைகளில் மெக்னீசியம்,கால்சியம்,பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.

சின்ன வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டு பற்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இதில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது.அதேபோல் நரம்புகளை வலுப்படுத்தும் உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.