30 நாட்களுக்கு மேல் அரிசி சாதம் சாப்பிடாமல் இருந்த என்னாகும் தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By Divya

30 நாட்களுக்கு மேல் அரிசி சாதம் சாப்பிடாமல் இருந்த என்னாகும் தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Divya

தென் இந்தியர்களின் பிரதான உணவாக அரிசி சாதம் உள்ளது.இந்தியாவில் இருந்து அதிகமான அரிசி ஏற்றுமதி நடக்கிறது.அரிசியில் இருந்து இட்லி,தோசை,இடியாப்பம்,பிரியாணி போன்ற ருசி நிறைந்த உணவுகள் தயாரிக்கப்படுகிறது.

இதில் வெள்ளை சாத உணவுகளையே பெரும்பலான மக்கள் உட்கொள்கின்றனர்.அரிசி உணவுகள் ருசியானவையாக இருந்தாலும் அதை அதில் இருக்கின்ற கார்போஹைட்ரேட் உடலுக்கு பல தீங்குகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

இன்று பலரும் பாலிஷ் செய்யப்பட்ட அரிசியை தான் பயன்படுத்தி வருகின்றோம்.இந்த அரிசி உணவுகளை உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு உயர்ந்துவிடும்.உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்து உடல் பருமனை ஏற்படுத்திவிடும்.

நீங்கள் தினமும் மூன்று வேளை அரிசி உணவை உட்கொள்ளும் பழக்கத்தை கொண்டிருந்தால் அவை நிச்சயம் பின்னாளில் பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.அதேசமயம் அரிசி உணவுகளை நம் உணர்வில் கலந்தவை என்பதால் அதை முழுவதுமாக ஒதுக்கி வைக்கவும் முடியாது.

தினமும் ஒருவேளை அல்லது குறைவான அளவு மட்டும் அரிசி உணவுகள் எடுத்து உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.ஆனால் அளவிற்கு அதிகமாகவோ அல்லது மூன்று வேளையும் அரிசி உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வந்தால் நிச்சயம் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த அரிசி உணவுகளை ஒரு மாதத்திற்கு சாப்பிடாமல் இருந்தால் என்ன ஆகும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.

அரிசியில் கார்போஹைட்ரேட்,ஸ்டார்ச் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது.பாலிஷ் செய்யப்பட்ட அரிசி உணவை நாம் ஒரு மாத காலம் உட்கொள்ளாமல் இருந்தால் இரத்த சர்க்கரை அளவு உயராமல் இருக்கும்.

சர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசி உணவை தவிர்த்துவிட்டு அதற்கு மாற்று பழுப்பு அரிசி உணவுகளை குறைவான அளவு கொள்ளுங்கள்.அரிசியில் அதிக கலோரி இருக்கிறது.ஒரு மாத காலம் அரிசி உணவை தவிர்த்தால் நிச்சயம் உடல் எடை குறையும்.

அதேபோல் முழுமையாக அரிசி சாதத்தை தவிர்த்தால் மலச்சிக்கல் பிரச்சனை,பசியை கட்டுப்படுத்த முடியாமல் பல பிரச்சனைகள் ஏற்படலாம்.உடல் சோர்வு,தலைச்சுற்றல்,மயக்கம்,தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.எனவே தினசரி குறைவான அளவு அரிசி உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.