விடாமல் தும்மல் வருதா? காலையில் எழுந்ததும் இந்த ட்ரிங்க் குடிங்க!! அடுக்கு தும்மல் கவலை இனி இல்லை!!

Photo of author

By Divya

விடாமல் தும்மல் வருதா? காலையில் எழுந்ததும் இந்த ட்ரிங்க் குடிங்க!! அடுக்கு தும்மல் கவலை இனி இல்லை!!

Divya

சிலருக்கு இடைவிடாமல் தும்மல் வந்து கொண்டே இருக்கும்.இந்த அடுக்கு தும்மல் பிரச்சனை இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள குணப்படுத்திக் கொள்ள கீழ்கண்ட வீட்டு மருத்துவ குறிப்பை பின்பற்றலாம்.

அடுக்கு தும்மலுக்கான காரணங்கள்:-

**காற்று மாசுபாடு
**அலர்ஜி
**மருந்து விளைவு
**காரம் நிறைந்த உணவு
**தூசு
**சளி காய்ச்சல்

அடுக்கு தும்மலை குணப்படுத்தும் வீட்டு மருத்துவ குறிப்பு:

தேவையான பொருட்கள்:-

1)தண்ணீர் – ஒரு கிளாஸ்
2)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

**முதலில் பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.அதன் பின்னர் ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி சாறு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

**பிறகு தண்ணீர் வெது வெதுப்பான சூட்டிற்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.பிறகு எலுமிச்சை சாறை அதில் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.

**இந்த எலுமிச்சை பானத்தில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருக வேண்டும்.இதை தினமும் காலையில் எழுந்ததும் தாயரித்து குடித்தால் அடுக்கு தும்மல் ஏற்படுவது கட்டுப்படும்.

மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

**அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பின்னர் கால் தேக்கரண்டி மஞ்சள் தூளை அதில் போட்டு ஒரு நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

**இந்த பானத்தை காலை நேரத்தில் பருகி வந்தால் அடுக்கு தும்மல் பிரச்சனை நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)மிளகு – நான்கு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

**முதலில் நான்கு மிளகை உரலில் போட்டு தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் சூடாக்க வேண்டும்.

**இந்த தண்ணீரை கிளாஸிற்கு ஊற்றி இடித்த மிளகுத் தூள் சேர்த்து பருகினால் அடுக்கு தும்மல் குணமாகும்.