நமது உடலில் உள்ள கழிவுகளை வடித்து சிறுநீராக வெளியேற்றும் வேலையை சிறுநீரகம் அதாவது கிட்னி என்ற உறுப்பு செய்கிறது.சிறுநீர் வெளியேற்றுவது என்பது மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது.
இந்த சிறுநீரில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அதை அலட்சியமாக கடந்துவிட முடியாது.நமது உடல் ஆரோக்கியத்தின் நிலை சிறுநீரின் நிறத்தை கொண்டு கணித்துவிட முடியும்.நாம் அருந்தும் தண்ணீர்,உட்கொள்ளும் உணவு மற்றும் எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரையை பொறுத்து சிறுநீரின் நிறத்தில் மாறுபாடு ஏற்படலாம்.
சிறுநீரின் நிறமும் உடல் ஆரோக்கியமும்
நீங்கள் வெளியேற்றும் சிறுநீர் வெள்ளை நிறத்தில் அதாவது தெளிவு இல்லாத நிறத்தில் இருந்தால் அது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
நுரையீரல் மற்றும் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட நோய் பாதிப்புகள் இருந்தால் சிறுநீர் பழுப்பு நிறத்தில் வெளியேறும்.
உங்களுக்கு இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறினால் அது சிறுநீர் பாதை தொற்று,சிறுநீரக செயலிழப்பு,சிறுநீர்ப்பை புற்றுநோய் போன்றவற்றின் அறிகுறியாக இருக்கலாம்.
உங்களுக்கு வெளியேறும் சிறுநீர் பச்சை நிறத்தில் இருந்தால் அவை சிறுநீரக கல்,சிறுநீர் பாதை தொற்று போன்றவற்றின் அறிகுறியாக இருக்கலாம்.உங்களுக்கு வெண்மை நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் பித்தப்பை கல்,சிறுநீர் பாதை தொற்று,சிறுநீரக கல் இருப்பதை உணர்த்துகிறது.
உங்களுக்கு வெளிர் நிறத்தில் சிறுநீர் இருந்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு இருக்கிறது என்று அர்த்தம்.நீங்கள் மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டால் உங்கள் சிறுநீர் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.அதேபோல் கல்லீரல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் இருந்தால் சிறுநீரின் நிறம் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
உங்களுக்கு கருப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் அவை சிறுநீரக செயலிழப்பு,சிறுநீரக கல் போன்ற பாதிப்புகளுக்கான அறிகுறியாக இருக்கலாம்.சிவப்பு நிற உணவுகளை உட்கொண்டால் சிறுநீர் நிறம் சிவப்பாக இருக்கும்.அடிக்கடி தண்ணீர் குடித்தல்,ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற செயல்கள் மூலம் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்து கொள்ளலாம்.