ADMK : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பிறகு அதிமுக எடப்பாடி வசம் வந்தாலும் அதன் நிர்வாகிகள் யாரும் சரிவர அவரை மதிப்பது கூட இல்லை. இவரால் அவர்களை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பாலாஜி மற்றும் பாண்டியராஜன் உட்கட்சி மோதல் என தொடங்கி செங்கோட்டையன் எஸ்.பி வேலுமணி என பலரது தரப்பு பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறார். தற்சமயம் உட்க்கட்சி கோஷ்டி மோதல் தான் தீர்க்க முடியா பிரச்சனையாக உள்ளது.
இதனையெல்லாம் கண்டிக்கும் வகையில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் ஒன்றை காணொளி வாயிலாக எடப்பாடி பழனிச்சாமி நடத்தினார். அதில் மிகவும் காட்டமாக பேசியதாகவும் சிலருக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறியுள்ளனர். நெருங்கி வரும் தேர்தல் சமயத்தில் யாரும் உட்கட்சி ரீதியாக சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. அதே போல பலரும் திமுக அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் நெருக்கத்தில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
இது ரீதியான ஆதாரம் கூட உள்ளது என சென்னையை சேர்ந்த மாவட்ட செயலாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் அந்த மாவட்ட செயலாளர் இதனை சிறிதும் கூட பொருட்படுத்தாமல், தலைவரே இதெல்லாம் பிசினஸ் ரீதியான பேச்சு இதை விட்டு விடுங்கள், கட்சிக்கு என்ன செய்ய வேண்டும் அதை மட்டும் சொல்லுங்கள் என்று ஆர்டர் போட்டுள்ளார். உடனடியாக எடப்பாடி, மறைந்த முதல்வர் அம்மா இருந்தால் இப்படித்தான் பதில் பேசுவீர்களா என்று கேட்டுள்ளார்.
மீண்டும் அந்த மாவட்ட செயலாளர், அம்மா பற்றியெல்லாம் எதுவும் பேசாதீர்கள் என்று கூறிவிட்டு உடனடியாக காணொளியை துண்டித்து விட்டாராம். மாவட்ட செயலாளர்கள் மத்தியில் எடப்பாடிக்கு மரியாதை என்பதே இல்லாமல் போய்விட்டது. அது மட்டுமில்லாமல் இவர்களையெல்லாம் கட்சியை விட்டு நீக்கினாலும் இவருக்கு சிரமம் தான் என்பதால் பொறுத்து போவதாக கூறுகின்றனர்.