Rashmika Mandanna: வளர்ந்து வரும் நடிகைகளில் ராஷ்மிகா மந்தனாவும் ஒருவர். தமிழ் திரை துறையில் டாப் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது புஷ்பா பாகம் 2 வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா கன்னட திரை துறையின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து எம்எல்ஏ ரவிக்குமார் கவுடா கண்டனம் தெரிவித்திருந்தார்.
அவரது முதல் படமே கன்னட மொழியில் இருந்து தான் ஆரம்பித்தது. தற்பொழுது விழாவில் பங்கேற்க அவரை தொடர்பு கொண்டால் நான் ஹைதராபாத்தில் உள்ளேன், என்னால் எப்படி வரமுடியும்?? கர்நாடக எங்கு உள்ளது என்று எனக்கு தெரியாது எனக் கூறிவிட்டார். அது மட்டுமின்றி இது ரீதியாக பத்து முறைக்கு மேல் அவரது வீட்டை நாடி சென்றிருப்போம், அப்பொழுதும் அவர் மதிக்காமல் விட்டுவிட்டார்.
இதனால் அவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். இது திரைத்துறையில் பூகம்பமாக வெடித்தது. பலரும் ராஷ்மிகாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கொடவா தேசிய கவுன்சில் தலைவர் ராஷ்மிகாவுக்கு ஆதரவு தெரிவித்து போலீஸ் பாதுகாப்பு வேண்டுமென்று கேட்டுள்ளார். இவர் கொடவா பழங்குடி இனத்தை சேர்ந்தவர், தற்பொழுது தனது முழு திறமையுடன் திரைத்துறையில் பல வெற்றிகளை குவித்து வருகிறார்.
இச்சமயத்தில் அவருக்கு ஒரு சிலர் அச்சுறுத்தல் அளிக்கிறார்கள். இதனால் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவரை சார்ந்த சமூக பெண்களுக்கும் அதே பாதுகாப்பு வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சர் உள்ளிட்ட கர்நாடகா அமைச்சர் என அனைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். இது ரீதியாக அமைச்சர்கள் தற்போது வரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.