உடலில் மிகப் பெரிய உள்ளுறுப்பாக திகழும் கல்லீரலில் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
தீர்வு 01:
வல்லாரை கீரை பொடி – ஒரு தேக்கரண்டி
மிளகுத் தூள் – அரை தேக்கரண்டி
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி வல்லாரை கீரை பொடி மற்றும் அரை தேக்கரண்டி மிளகுத் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த பானத்தை வடிகட்டி பருகி வந்தால் கல்லீரலில் தேங்கிய கழிவுகள் முழுமையாக வெளியேறும்.வல்லாரை கீரை பொடியை மோரில் கலந்து பருகி வந்தால் கல்லீரல் கழிவுகள் அகலும்.
தீர்வு 02:
மணத்தக்காளி கீரை பொடி – ஒரு தேக்கரண்டி
மோர் – ஒரு கிளாஸ்
ஒரு கிளாஸ் பசு மோரில் ஒரு தேக்கரண்டி மணத்தக்காளி கீரை பொடி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த மோரை தினமும் பருகி வந்தால் கல்லீரல் பாதிப்பு குணமாகும்.
தீர்வு 03:
வெற்றிலை – மூன்று
கிராம்பு – மூன்று
ஏலக்காய் – ஒன்று
முதலில் வெற்றிலையை காம்பு நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் இரண்டு கிராம்பை உரலில் போட்டு தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து நறுக்கிய வெற்றிலை,கிராம்பு மற்றும் ஒரு இடித்த ஏலக்காய் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு இதை நாள்முழுவதும் ஆறவைத்த பின்பு பருக வேண்டும்.இந்த பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் கல்லீரல் கழிவுகள் முழுமையாக வெளியேறும்.
தீர்வு 04:
எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
புதினா – 10 இலைகள்
இஞ்சி – ஒரு துண்டு
தண்ணீர் – ஒரு கிளாஸ்
பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து ஒரு துண்டு இஞ்சை இடித்து அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.
பிறகு பத்து புதினா தலைகளை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இந்த பானத்தை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு இதை கிளாஸிற்கு வடிகட்டி எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் கல்லீரல் கழிவுகள் முற்றிலும் வெளியேறிவிடும்.