பெண்களுக்கு கருப்பை இறக்கம் எதனால் ஏற்படுகிறது? இதன் அறிகுறி எப்படி இருக்கும்?

Photo of author

By Divya

பெண்களுக்கு கருப்பை இறக்கம் எதனால் ஏற்படுகிறது? இதன் அறிகுறி எப்படி இருக்கும்?

Divya

இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை சூழல் என்பது முழுமையாக மாறிவிட்டது.உடல் ஆரோக்கியம் சார்ந்த பல பாதிப்புகளை ஆண்,பெண் என்று அனைவரும் சந்திக்கின்றனர்.குறிப்பாக பெண்கள் பலர் உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

மோசமான உணவுப் பழக்கம்,வயது முதுமை,உடல் நலக் கோளாறு காரணமாக கருப்பை சம்மந்தப்பட்ட பாதிப்புகளை அதிகளவு எதிர்கொண்டு வருகின்றனர்.இதில் கருப்பை இறங்குதல் பாதிப்பு என்பது சமீப காலமாக அதிகரித்து வரும் பிரச்சனையாக உள்ளது.

கருப்பையானது பிறப்புறுப்பை நோக்கி கீழ் இறங்குவதை தான் கருப்பை இறங்குதல் என்று அழைக்கிறார்கள்.

கருப்பை இறக்கம்:

இந்த பாதிப்பு எல்லா பெண்களுக்கும் ஏற்படாது.மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இந்த கருப்பை இறக்கம் வர அதிக வாய்ப்பிருக்கிறது.பிரசவ காலத்திற்கு பிறகு அதிக எடை தூக்குதல்,உடல் பருமன் போன்ற காரணங்களால் கருப்பை இறக்கம் ஏற்படுகிறது.

கருப்பை இறக்கம் ஏற்பட்டதை உணர்த்தும் அறிகுறிகள்:

**இடுப்பு பகுதியில் வலி
**யோனி பகுதியில் துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதல் உண்டாதல்
**யோனி பகுதியில் அரிப்பு ஏற்படுதல்
**பிறப்புறுப்பு பகுதியில் புண்கள் உருவாதல்
**உடல் பலவீனம்
**அளவிற்கு அதிகமாக சிறுநீர் வெளியேற்றுதல்
**தும்மல் ஏற்படும் பொழுது சிறுநீர் கசிவு
**வெள்ளைப்படுதல் அதிகமாக இருத்தல்
**கருப்பை சதை பலவீனம்
**உடலுறவு சமயத்தில் அதிக இரத்தப்போக்கு
**மலம் வெளியேற்றுவதில் சிரமம்

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் சிறிதும் தாமதம் செய்யாமல் உடனடியாக மருதுவரை அணுகி உரிய தீர்வு காண்பது நல்லது.சில பெண்கள் குழந்தை பெற்ற சிறிது காலம் கழித்து கருப்பை இறக்க பிரச்சனையை சந்திக்கின்றனர்.சில பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன்னரே கருப்பை இறக்க பிரச்சனையை சந்திக்கின்றனர்.

35 வயதை கடந்த பெண்களுக்கு கருப்பை இறக்க பிரச்சனை வர அதிக வாய்ப்பிருக்கிறது.எனவே பெண்கள் குழந்தை பெற்ற பிறகும் 40 வயதை கடந்த பிறகும் கருப்பை பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.