நகத்தை கடித்து துப்பும் பழக்கம் இருக்கா? இதன் பேராபத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்!!

Photo of author

By Divya

நகத்தை கடித்து துப்பும் பழக்கம் இருக்கா? இதன் பேராபத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்!!

Divya

உங்களில் பலருக்கு நகம் கடிக்கும் பழக்கம் அதிகமாகவே இருக்கும்.சிலர் கோபத்தின் போது நகத்தை கடிப்பார்கள்.சிலர் வளர்ந்த நகத்தை கடித்தே எடுத்துவிடுவார்கள்.இது மிகவும் மோசமான பழக்க வழக்கம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

நகத்திற்குள் பாக்டீரியாக்கள்,கிருமிகள் அதிகமாக தேங்கி இருக்கும்.அப்படி இருக்கையில் நகத்தை கடித்தால் அதில் இருக்கின்ற கிருமி உடலுக்குள் சென்று வயிற்று வலி,குடல் அலர்ஜி போன்ற பாதிப்புகளை உண்டாக்கும்.

சிலர் நகம் கடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகவே இருப்பார்கள்.எந்நேரமும் வாயில் நகத்தை வைத்து கடித்தபடி இருப்பது உடலை ஆரோக்கியத்தை பாதிக்கும் செயலாக மாறிவிடும்.நகம் கடிப்பதால் நமது பல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.இதனால் வாய் சுகாதாரம் கேள்விக்குறியாகிறது.

நகம் கடிப்பதால் அதில் இருக்கின்ற அழுக்கு வயிற்றுக்குள் சென்று இரைப்பை நோய் தொற்றுக்கு வழிவகை செய்யும்.நகம் கடிப்பதால் பல் ஈறுகளின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும்.

நகம் கடிக்கும் பழக்கம் நாளடைவில் மன ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.நமது குடலில் புழுக்கள் உருவாக நகம் கடிக்கும் பழக்கம் முக்கிய காரணமாக இருக்கிறது.

டைபாய்டு,சீதபேதி போன்ற பிரச்சனைகள் நகம் கடிப்பதால் ஏற்படக்கூடும்.நகம் கடிக்கும் பழக்கம் தீவிரமானால் நகங்கள் சேதமாகக் கூடும்.நகம் கடிப்பதால் பெருவிரல் புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது.

நகம் கடிக்கும் பழக்கத்தை நிறுத்த வழிகள்:

நகங்களை நெயில் கட்டர் கொண்டு அடிக்கடி வெட்டிவிட வேண்டும்.நகத்தின் மீது வேப்பிலை சாறு பூச வேண்டும்.இதன் கசப்பு சுவையால் நகம் கடிப்பதில் இருந்து தீர்வு கிடைக்கும்.நகம் கடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மருத்துவரை அணுகி உரிய தீர்வு காணலாம்.