வெயில் காலத்தில் தர்பூசணி பழத்திற்கு அதிக வரவேற்பு இருக்கிறது.தண்ணீர் நிறைந்த பழமான தர்பூசணி இனிப்பு சுவை மிகுந்தவையாக இருக்கிறது.இந்த பழம் உடல் சூட்டை தணித்து கோடை கால நோய்கள் உடலில் அண்டாமல் தடுக்கிறது.தர்பூசணி பழம் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது.
உடல் வறட்சியை தடுத்து நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.கண் எரிச்சல்,கண் சூடு போன்ற பாதிப்புகளை குறைக்கிறது.இதயத் துடிப்பை சீர் செய்ய தர்பூசணி பழத்தை சாப்பிடலாம்.
தர்பூசணியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-
1)பொட்டாசியம்
2)வைட்டமின் சி
3)வைட்டமின் ஏ
4)வைட்டமின் பி6
5)ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்
6)நீர்ச்சத்து
தர்பூசணி நன்மைகள்:-
1.இரைப்பை குடல் அலர்ஜி பாதிப்பு குணமாகும்.இதய ஆரோக்கியம் மேம்படும்.செரிமானப் பிரச்சனை நீங்கும்.
2.கோடை நோய்கள் குணமாகும்.கண் சம்மந்தபட்ட அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.
3.மாரடைப்பு அபாயம் குறையும்.உடல் எடையை குறைக்க உதவுகிறது.
தர்பூசணி பழத்தை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:
அதிக நன்மைகள் நிறைந்த தர்பூசணி பழத்தை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிட்டால் அவை விஷமாக மாறிவிடும்.
பிரிட்ஜில் தர்பூசணி பழத்தை வெட்டிய நிலையில் வைத்தால் பாக்டீரியாக்கள் உருவாகிவிடும்.இந்த தர்பூசணி பழத்தை சாப்பிட்டால் வாந்தி,குமட்டல்,தலைச்சுற்றல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
பிரிட்ஜில் பதப்படுத்துபட்ட தர்பூசணி பழத்தை சாப்பிட்டால் சளி,இருமல்,தொண்டை கட்டல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
பிரிட்ஜில் வைத்த தர்பூசணி பழத்தின் சுவை குறைவாக இருக்கும்.வெட்டப்பட்ட நிலையில் பிரிட்ஜில் பதப்படுத்தப்படும் தர்பூசணியில் ஊட்டச்சத்துக்கள் குறைந்துவிடும்.பிரிட்ஜில் வைத்து சாப்பிடும் தர்பூசணி பழத்தால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.
தர்பூசணி பழத்தை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதால் வயிற்று வலி,குடல் அலர்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.