கிட்னியில் ஒரு துளி கழிவுகளை கூட இந்த பழங்கள் விட்டுவைக்காது!! ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Divya

கிட்னியில் ஒரு துளி கழிவுகளை கூட இந்த பழங்கள் விட்டுவைக்காது!! ட்ரை பண்ணுங்க!!

Divya

சிறுநீரகம் நமது உடலின் முக்கிய உள்ளுறுப்பாக உள்ளது.கழிவுகளை திரவமாக அதாவது சிறுநீராக வெளியேற்றும் பணியை செய்து வரும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் இதை யாரும் செய்வதில்லை.இதற்கு மாறாக சிறுநீரகம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் ஏற்பட நாமே வழிவகை செய்கின்றோம்.இன்றைய காலகட்டத்தில் தண்ணீர் கூட அருந்த நேரம் இல்லாமல் வேலை,பணம் என்று ஓடும் மக்கள் சீக்கிரம் நோய் வாய்ப்படுகின்றனர்.

பணத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நமது உடல் ஆரோக்கியத்திற்கும் கொடுக்க வேண்டும்.நாம் அதிக காசு செலவு செய்து நமது உடல் ஆரோக்கியத்தை காக்க வேண்டுமென்று இல்லை.சிறு சிறு பழக்கங்கள் மூலம் நமது உடல் ஆரோக்கியத்தை நாம் முழுமையாக மேம்படுத்திக் கொள்ளலாம்.

தினமும் உடலுக்கு தேவைப்படும் தண்ணீரை பருகி வந்தாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.இது தவிர மலிவு விலையில் கிடைக்கின்ற பழங்களை உட்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளாலாம்.

நமது சிறுநீரின் ஆரோக்கியத்தில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.தண்ணீர் சத்து நிறைந்த பழங்களை உட்கொள்வதன் மூலம் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளைஈசியாக வெளியேற்றிவிடலாம்.

1)சிட்ரஸ் பழங்கள்

நமது சிறுநீரகத்தில் தேங்கி இருக்கும் நச்சுக் கழிவுகளை சிட்ரஸ் பழச்சாறு மூலம் வெளியேற்றலாம்.எலுமிச்சை சாறு,ஆரஞ்சு பழம்,சாத்துக்குடி போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் சிறுநீரகத்தில் படிந்துள்ள நச்சு கழிவுகளை வெளியேற்றலாம்.

2)தர்பூசணி

நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி பழத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்மந்தபட்ட பாதிப்புகள் குணமாகும்.

3)மாதுளை

சிறுநீரகத்தில் படிந்துள்ள தேவையற்ற கழிவுகளை அகற்ற மாதுளம் பழ சாறு பருகலாம்.

4)சிவப்பு திராட்சை

இதில் இருக்கின்ற ஆன்டி ஆக்ஸி டன்ட்கள் சிறுநீரக கழிவுகளை முழுமையாக அகற்ற உதவுகிறது.

5)பெரிய நெல்லி சாறு

தினமும் ஒரு கிளாஸ் பெரிய நெல்லி சாறு பருகி வந்தால் சிறுநீரகத்தில் படிந்துள்ள தேவையற்ற கழிவுகள் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.அதேபோல் தண்ணீரில் ரணகள்ளி பொடி கலந்து பருகி வந்தால் சிறுநீரக கழிவுகள் அகலும்.