தற்பொழுது பலரும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையை சந்திக்கின்றனர்.நவீன கால வளர்ச்சியால் மனிதர்கள் சோம்பேறிகளாகி வருகின்றனர்.சோம்பல் வாழ்க்கை முறையால் குறைவான அளவு உணவு உட்கொண்டாலும் எடை அதிகரித்து பருமனாகிவிடுகின்றனர்.
சிலருக்கு நோய் பாதிப்பு காரணமாக அதிக மருந்துங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.இதனால் உடல் எடை வேகமாக கூடிவிடுகிறது.ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உட்கொள்ளவதால் உடல் எடை கூடுகிறது.
குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் பாஸ்ட் புட்,ஜங்க் புட் போன்றவற்றிற்கு அடிமையாகி உள்ளனர்.வீட்டு சாப்பாட்டை ஒதுக்கிவிட்டு கடைகளில் சாப்பிடும் பழக்கம் மக்களிடத்தில் அதிகரித்து காணப்படுகிறது.
உணவு கலாச்சாரம் மோசமாக இருப்பதால் உடல் ஆரோக்கியம் சீர்குலைந்து சீக்கிரம் மருத்துவ செலவு ஏற்படுகிறது.
உடல் எடை அதிகரிக்க காரணம்:
*மோசமான உணவுப்பழக்கம்
*சோமல் வாழ்க்கைமுறை
*ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தல்
*கொழுப்பு உணவுகள்
*மருந்து பக்க விளைவு
*நோய் பாதிப்பு
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை சுலபமாக குறைக்க செய்ய வேண்டியவை:
நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் முதலில் தண்ணீர் பருக வேண்டியது முக்கியம்.தண்ணீரை உரிய நேரத்தில் பருக வேண்டியது அதைவிட முக்கியம்.
தினமும் 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் பருகி வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் முழுமையாக வெளியேறிவிடும்.
உணவு உட்கொள்வதற்கு முன்னர் அதாவது 10 நிமிடங்களுக்கு முன் ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீர் குடித்தால் உடல் எடை வேகமாக குறையும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.நாம் உணவு உட்கொள்வதற்கு முன்னர் தண்ணீர் பருகுவதால் குறைவான அளவு உணவே எடுத்துக் கொள்ள முடியும்.இதனால் அதிகமாக உட்கொள்வது கட்டுப்படும்.
இதை தொடர்ந்து செய்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் படிவது தடுக்கப்படும்.இதனால் சீக்கிரமாகவே உடல் எடை குறைந்துவிடும்.அதேபோல் தினமும் காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீர் பருகி உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்துவிடும்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள்,உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.