சிலர் வயிறு முட்ட சாப்பிட்டாலும் ஒல்லியாவே இருப்பாங்க.உடல் எடை கட்டுக்கோப்பாக இருக்க வேண்டியது முக்கியம் தான்.இருப்பினும் எலும்பும் தோலுமாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.உடல் பலவீனம்,உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.எனவே உடல் எடையை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வலுமுறைகளை பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)அஸ்வகந்தா சூரணம் – 10 கிராம்
2)சதாவரி சூரணம் – 10 கிராம்
3)அமிர்தவல்லி சூரணம் – 10 கிராம்
4)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
1.நாட்டு மருந்து கடையில் விற்பனை செய்யப்படும் அஸ்வகந்தா சூரணம்,சதாவரி சூரணம் மற்றும் அமிர்தவல்லி சூரணத்தை தலா 50 கிராம் அளவிற்கு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
2.பிறகு கிண்ணம் ஒன்றை எடுத்து வைத்து வாங்கி வந்த சூரணத்தில் ஒவ்வொன்றிலும் 10 கிராம் அளவிற்கு அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
3.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி தேனை ஊற்றி நன்றாக குழைத்து இரவு நேரத்தில் சாப்பிடுங்கள்.தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)செவ்வாழைப்பழம் – ஒன்று
2)பசும் பால் – ஒரு கிளாஸ்
3)தேன் – ஒரு தேக்கரண்டி
4)வேர்கடலை பொடி – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
1.முதலில் ஒரு செவ்வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
2.பின்னர் இரண்டு தேக்கரண்டி வேர்க்கடலையை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து பவுடர் செய்து கொள்ளுங்கள்.
3.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடாக்குங்கள்.பிறகு நறுக்கி வைத்துள்ள செவ்வாழைப்பழத் துண்டுகளை அதில் போட்டுக் கொள்ளுங்கள்.
4.பிறகு வறுத்து அரைத்த வேர்கடலை பொடியை போட்டு கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.
5.இந்த பாலில் தேன் கலந்து பருகி வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.இயற்கையான முறையில் உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் இந்த மெத்தடை முயற்ச்சிக்கலாம்.