வயதான காலத்தில் எலும்புகள் இரும்பு போல் வலிமையாக இருக்க.. இந்த பவுடரை பாலில் கலந்து குடிங்க!!

Photo of author

By Divya

வயதான காலத்தில் எலும்புகள் இரும்பு போல் வலிமையாக இருக்க.. இந்த பவுடரை பாலில் கலந்து குடிங்க!!

Divya

உடல் எலும்புகளை வலிமையாக்கும் சத்து பவுடர் தயாரிப்பது குறித்து விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது.இந்த சத்து பவுடரை பாலில் கலந்து பருகி வந்தால் எலும்பு சம்மந்தபட்ட அனைத்து பாதிப்புகளும் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)பாதாம் பாருப்பு – 25 கிராம்
2)கருப்பு உளுந்து – 50 கிராம்
3)வெள்ளை உளுந்து – 50 கிராம்
4)முந்திரி – 25 கிராம்
6)பிஸ்தா – 25 கிராம்
7)கருப்பு எள் – 25 கிராம்
8)வெள்ளை எள் – 25 கிராம்
9)சோம்பு – 2 தேக்கரண்டி
10)ராகி – 100 கிராம்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து 50 கருப்பு உளுந்து சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

அடுத்து இதில் 50 கிராம் வெள்ளை உளுந்து சேர்த்து வறுக்க வேண்டும்.இதையும் கருப்பு உளுந்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் உலர் விதைகளான பாதாம் பருப்பு,பிஸ்தா பருப்பு மற்றும் முந்திரி பருப்பை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.

அதன் பிறகு 25 கிராம் கருப்பு எள் மற்றும் வெள்ளை எள்ளை வாணலியில் போட்டுக் கொள்ள வேண்டும்.இதனுடன் இரண்டு தேக்கரண்டி பெருஞ்சீரகம் அதாவது சோம்பு சேர்த்து வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.

அடுத்து முளைக்கட்டி உலர வைத்த ராகி 100 கிராம் அளவிற்கு எடுத்து வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.இந்த பொருட்கள் அனைத்தையும் நன்றாக ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை காற்றுபுகாத ஸ்டோரேஜ் கன்டைனரில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடாக்க வேண்டும்.பால் கொதி வரும் சமயத்தில் அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்க்க வேண்டும்.

பால் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு இதை ஒரு கிளாஸிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு மிக்ஸ் செய்து பருக வேண்டும்.

இந்த ஹெல்த் மிக்ஸ் பாலை தினமும் காலை,மாலை நேரத்தில் பருகி வந்தால் எலும்புகள் வலிமை அதிகரிக்கும்.