அரசு மற்றும் ஒரு சில தனியார் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய ஊழியர்களின் உடைய மாத சம்பளத்திலிருந்து 12 சதவிகிதம் வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு பிடித்தம் செய்யப்படக்கூடிய பணத்தினை EPFO அமைப்பானது நிர்வாகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஊழியர் வருங்கால வைப் நிதி ஆணையம் ஆனது பிஎஃப் பணத்தினை பெறுவதற்கு UAN என்ற எண்ணோன்றினை வழங்கி இருக்கும். இந்த எண்ணை கொண்டு மட்டுமே பிஎஃப் பெறக்கூடிய ஊழியர்களால் தங்களுடைய பிஎஃப் பணத்தினை பெற முடியும். சில நேரங்களில் இந்த எண்கள் தொலைந்து போய் அல்லது மறந்து போய்விட்டால் அவற்றை மீண்டும் பெறுவதற்கான வழிமுறைகளை கீழே காணலாம்.
UAN எண்ணை மீண்டும் பெறுவதற்கு :-
✓ ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://unifiedportal-emp.epfindia.gov.in/ உள்நுழைய வேண்டும்.
✓ அதன்பின், Know Your UAN என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
✓ செல்போன் நம்பரை உள்ளீடு செய்து request OTP கொடுக்க வேண்டும்
✓ அதன்பின் ஓடிபி உள்ளீடு செய்ய வேண்டும்.
✓ பின்னர், பெயர், பிறந்த தேதி, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை முழுமையாக கொடுத்தல் வேண்டும்.
✓ உங்களுடைய தரவுகள் சரிவர உள்ளீடு செய்யப்பட்டிருந்தால் உங்களுக்கு உங்களுடைய UAN கிடைக்கும்.