இப்பொழுது உள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரக்கூடிய சூழல் உள்ளதால் வெளியில் செல்லக்கூடிய பெண்கள் முக்கியமாக தங்களுடன் 5 பொருட்களை எடுத்துக் கொள்வது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அவை குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக காண்போம்.
✓ பெப்பர் ஜெல் ஸ்பிரே :-
தற்பொழுது பெண்களிடம் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு முக்கிய பாதுகாப்பு கருவியாக இந்த பெப்பர் ஜெல் ஸ்பிரே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தனியாக செல்லக்கூடிய பெண்கள் அல்லது பணி முடிந்து இரவு நேரங்களில் செல்லக்கூடிய பெண்களை யாராவது பின் தொடர்வது போன்று அல்லது தாக்கம் முயற்சிக்கும்போதோ இதை தாக்கு முயற்சி செய்பவர்களின் கண்கள் மற்றும் வாய்ப்பகுதிகளில் ஸ்பிரே செய்யலாம். இதனால் அவர்கள் மிகுந்த எரிச்சலை உணர்வதன் மூலம் அங்கிருந்து சுலபமாக தப்பிச் செல்ல முடியும். இதனை மிகவும் கவனமாக பயன்படுத்துதல் அவசியம். வீட்டில் இதனை வாங்கி வைத்திருக்கும் பட்சத்தில் குழந்தைகள் கைகளில் எட்டாதவாறு இதனை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
✓ டெட்டிக்கல் பென் :-
சாதாரண பேனா போலவே தோற்றமளிக்க கூடிய இந்த பேனா, மற்ற பேனாக்களை போல எளிமையாக வளையும் தன்மையை பெற்று இருக்காது அதற்கு மாறாக மிகவும் உறுதியுடன் காணப்படும். இந்தப் பேனாவை பெண்கள் தன்னுடைய ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொள்வதன் மூலம் யாராவது அருகில் நெருங்கி வரும் பொழுது அல்லது தவறான நோக்கத்தோடு தாக்க வரும் பொழுது இந்த பேனாவை எடுத்து அவர்களின் கைகளில் அல்லது உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் குத்திவிட்டால் அந்த வழியில் அவர்கள் துடிக்கும் நேரத்தில் நம்மால் தப்பிச் செல்ல இயலும்.
✓ சேஃப்டி கீச்செயின் :-
சாதாரண கீ செயின் போன்ற தோற்றம் அளிக்கக் கூடிய இது மிகவும் பாதுகாப்பான ஒரு கருவியாக குறிப்பிடப்படுகிறது. காரணம் யாராவது ஒருவர் தனியாக செல்லக்கூடிய பெண்ணை பின் தொடர்ந்தாலோ அல்லது பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டாலோ இந்த கீ செயினை அழுத்துவதன் மூலம் அதில் இருக்கக்கூடிய அலாரம் சவுண்ட் அடிக்க தொடங்கி 50 கிலோமீட்டர் தூரம் வரை ஒளியை எழுப்பக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அலாரம் சவுண்டை கேட்டு தன்னை தாக்க வரக்கூடிய எதிரி கூட பயந்து ஓடிவிட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
✓ செல்ஃப் ரிங் :-
அழகுக்காக பெண்கள் அணியக்கூடிய பொருட்களில் மோதிரமும் ஒன்று. அந்த மோதிரத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக வடிவமைக்கப்பட்டது தான் செல்ஃப் ரிங். இதில் கத்தி போன்ற கூர்மையான ஒரு அமைப்பு பொருத்தப்பட்டிருப்பதால் தன்னைதாக வருபவரிடம் இருந்தும் தன்னை பாலியல் சீண்டல் செய்ய வருபவரிடம் இருந்தும் எளிமையாக பெண்கள் தப்பிக்க இது மிகப்பெரிய கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுல இருக்கக்கூடிய முனைப்பகுதியை நீக்கிவிட்டு கூர்மையாக இருக்கக்கூடிய பகுதியை வைத்து தாக்குவதன் மூலம் எளிமையாக தப்பிக்கலாம்.
✓ எல்லோ ஜாக்கெட் :-
ஐபோன் பயன்படுத்தக்கூடிய பெண்களுக்கு இது மிகவும் பாதுகாப்பான ஒன்றாக விளங்குகிறது. காரணம் இந்த ஐபோன் கேஸை பயன்படுத்துவதன் மூலம் எதிரிகளுக்கு ஷாக் கொடுத்து அவர்களிடமிருந்து தப்பிக்க முடியும். பின் தொடர்பவர்கள் அல்லது பாலியல் சீண்டலுக்கு முயற்சி செய்பவர்களின் கைகளில் இந்த செல்போன் கேசில் இருக்கக்கூடிய பட்டனை அழுத்தி வைப்பதன் மூலம் அவர்களுக்கு ஒருவித ஷாக் உணர்வு ஏற்படும். அதன்மூலம் அவர்களிடமிருந்து எளிமையாக தப்பிக்க முடியும்.
குறிப்பு :-
இது போன்ற பாதுகாப்பு கருவிகளை பயன்படுத்தக்கூடிய பெண்கள் வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு எளிதில் எட்டாத வகையில் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.