பள்ளிக்கல்வி துறையை பொறுத்தவரையில் தமிழகம் மிகவும் தாழ்வான இடத்தில் இருப்பதாகவும் தமிழகத்தில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு கல்வி அறிவு போதுமானதாக இல்லை என்றும் நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் அவர்கள் பேசியிருப்பது பலருடைய கண்டனங்களை பெற்று வருகிறது.
அதாவது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழகத்தில் கல்வி தரம் குறைவாக இருப்பதாகவும், அதிலும் குறிப்பாக கொரோனாவிற்கு பின்பு தமிழகத்தில் இருக்கக்கூடிய பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் வகுப்பு பாடத்திட்டங்களை கூட சரிவர படிக்க முடியாத சூழல் உருவாக்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார். தமிழகம் மட்டும் இன்றி கேரளா மற்றும் மேற்கு வங்கத்திலும் இதே போன்ற நிலை தான் இருக்கிறது என்றும் ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டத்தை கூட மூன்றாம் வகுப்பு மாணவர்களால் படிக்க முடியாதது கல்வி தரம் எவ்வாறு இருக்கிறது என்பதை விளக்கு வாதாக அமைந்திருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறு நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பேசி இருக்கிறார். இது காங்கிரஸ் எம்பிக்கள் மற்றும் கனிமொழி போன்றவர்கள் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்திருக்கின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் கல்வி நிலை குறித்த ஒரு அறிக்கையானது வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் எட்டாம் வகுப்பு மாணவர்களால் மூன்றாம் வகுப்பு மாணவர்களின் உடைய பாடத்திட்டத்தில் உள்ள கேள்விகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றும் மூன்றாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்கள் ஒன்றாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களின் புத்தகங்களை படிப்பதற்கு மிகவும் திணறுவதாகவும் சிரமப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கொரோனா காலகட்டத்திற்கு பின்பு சரியான ஆசிரியர்கள் இல்லாததாலும் மாணவர்கள் தங்களுடைய வகுப்புகளை ஆன்லைனில் கற்றுக்கொள்ள துவங்கியதாலும் பல மாணவர்களின் உடைய கல்வியானது கேள்விக்குறியாகவே மாறி இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாக இருப்பினும் இதனை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லிய பொழுது தமிழகத்தை இழிவுபடுத்தக்கூடிய செயலாக இது அமைந்திருக்கிறது என குற்றம் சாட்டி எம்பி கனிமொழி மற்றும் காங்கிரஸ் எம்பிகள் என பலரும் வெளிநடப்பு செய்திருக்கின்றனர்.