புதுச்சேரியில் நடைபெற்று வரக்கூடிய பட்ஜெட் கூட்ட தொடரில் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை தொகை 1000 ரூபாயிலிருந்து 2500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி அவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
இதனை தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் குறிப்பிட்ட மகிழ்ச்சியான தகவல்கள் :-
✓ அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வரை படித்த மாணவர்களுக்கு கல்லூரியில் 3 ஆண்டுகள் பயில்வதற்கு மாதாமாதம் 1000 ரூபாய் உதவி தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
✓ ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக 2 கிலோ கோதுமை
✓ மதிய உணவில் தற்பொழுது 3 நாட்களுக்கு மட்டுமே முட்டை வழங்கப்பட்டு வந்த நிலையில் அனைத்து நாட்களிலும் முட்டை வழங்க முடிவு.
✓ விவசாயிகளுக்கு மழைக்கால வெள்ள நிவாரண நிதியாக 2000 ரூபாய் வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்திருக்கிறார்.
✓ மேலும் காரைக்கால் அம்மையார் நினைவு தினத்தை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் காரைக்கால் அம்மையார் பெயரில் கலை பண்பாட்டு துறை சார்பில் விருதுகள் வழங்கப்படும் என்றும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புதுச்சேரியில் நடைபெறக்கூடிய இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் மக்களுக்கு பல நல்ல திட்டங்களை வெளியிட்டு இருப்பது புதுச்சேரி மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்குவதாக அமைந்திருக்கிறது. இந்த மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 2500 ரூபாய் ஆக உயர்த்தப்படுவது புதுச்சேரியில் மட்டுமல்லாத தமிழகத்திலும் கொண்டுவர வேண்டும் என்று தமிழக மக்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.