BJP NTK: நாம் தமிழர் கட்சி சீமான் பாஜகவுடன் கூட்டணி வைக்க ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறி வந்தனர் இதனை உறுதி செய்யும் வகையில் பாஜகவின் பல செயல்முறைகளில் சீமான் தலையிடவில்லை. முரண்பாடான எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவும் இல்லை. குறிப்பாக மத்திய அரசின் தொகுதி வரையறையை கண்டிக்கும் விதத்தில் அனைத்து கட்சி பொதுக் கூட்டம் ஒன்றை தமிழக அரசு நடத்தியது.
ஆனால் அதில் சீமான் கலந்து கொள்ளவில்லை. இது இவர்களின் கூட்டணி உறுதி தன்மையை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. இதற்கு அடுத்த கட்டமாக திருமண நிகழ்ச்சியில் சீமான் மற்றும் அண்ணாமலை இருவரும் கலந்து கொண்டுள்ளனர். அப்படி கலந்து கொண்டு வெளியே செல்லும் பொழுது அண்ணாமலை, சீமானின் கையைப் பிடித்து அவருக்கு ஆதரவு கொடுத்து பேசியது தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அவரின் கையைப் பிடித்த படியே அண்ணா விட்றாதீங்க, ட்ரை பண்ணிட்டே இருங்க ஸ்ட்ராங்கா இருங்க என்று கூறியுள்ளார். சீமானும் சிரித்த முகத்தோடு சரி என்று பதிலளித்தார். இவர்கள் இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இதுகுறித்து அண்ணாமலை கூறியதாவது, பெரியாரை எதிர்ப்பதெல்லாம் சாதாரணமாக செய்துவிட முடியாது , அதுவும் ஆளும் கட்சி திமுக வாக இருக்கும் போது பல ரீதியான பிரச்சனைகளை சந்திக்க இயலும்.
அதனையே தனி ஆளாக நின்று பல எதிர்த்து போராடி வருகிறார். அரசியல் ரீதியான கொள்கைகள் எங்களுக்குள் ஒத்துப்போகாமல் இருந்தாலும் திமுக வை எதிர்க்கும் போராட்டத்தில் ஒன்று தான் என விளக்கமளித்திருந்தார். இவர்கள் இந்த சந்திப்பு மற்றும் அண்ணாமலை ஆதரவு கொடுத்தது என அனைத்தும் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் பாஜக நாம் தமிழர் கட்சி கூட்டணி உறுதியாகுவதை காட்டுகிறது.