நமது உணவின் சுவையை அதிகரிக்க உதவும் கறிவேப்பிலை பல ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது.தினமும் ஒரு கொத்து கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
பெரும்பாலானோர் கறிவேப்பிலை முடி உதிர்வை மட்டுமே சரி செய்யும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் உண்மையில் கறிவேப்பிலை உடல் நல பாதிப்புகளை குணப்படுத்தும் அருமருந்தாக திகழ்கிறது.
கறிவேப்பிலை நன்மைகள்:-
1)செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் கறிவேப்பிலையை காலை நேரத்தில் மென்று சாப்பிட்டு வந்தால் அவை சீக்கிரம் சரியாகும்.
2)உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க கறிவேப்பிலையை மென்று சாப்பிடலாம்.
3)தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கவும்,இளநரை பிரச்சனையை சரி செய்யவும் கறிவேப்பிலையை உட்கொள்ளலாம்.
4)உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் கறிவேப்பிலை சாப்பிடலாம்.கறிவேப்பிலை ஊறவைத்த நீரை பருகி வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
5)சருமப் பிரச்சனைகளை குணப்படுத்திக் கொள்ள கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டு வரலாம்.
6)உடலில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கரைக்க கறிவேப்பிலையை உட்கொள்ளலாம்.
7)இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள கறிவேப்பிலை நீர் அருந்தலாம்.கல்லீரலில் படிந்துள்ள கழிவுகள் அகல கறிவேப்பிலை நீர் பருகலாம்.
8)உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கறிவேப்பிலை பானம் செய்து பருகலாம்.
9)கண் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் முற்றிலும் குணமாக கறிவேப்பிலையை அரைத்து சாறு எடுத்து தண்ணீரில் கலந்து பருகலாம்.
10)உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற கறிவேப்பிலை ஊறவைத்த நீரை பருகிவிட்டு பின்னர் கறிவேப்பிலையை மென்று சாப்பிடலாம்.