உடல் தசைகளை வலிமைப்படுத்தும் 10 உணவுகள்!! இது மட்டும் மிஸ் ஆகாமல் பார்த்துக்கோங்க!!

Photo of author

By Divya

உடல் தசைகளை வலிமைப்படுத்தும் 10 உணவுகள்!! இது மட்டும் மிஸ் ஆகாமல் பார்த்துக்கோங்க!!

Divya

பெரும்பாலான நபர்கள் உடல் தசைகளை வலிமையாக வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.உடல் தசைகள் வலிமையாக இருக்க உடற்பயிற்சி மட்டும் போதாது.சில உணவுப் பழக்க வழக்கங்கள் மூலம் உடல் வலிமையை அதிகரிக்க வேண்டியது முக்கியம்.

புரதம்,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.இயற்கை உணவுகள் மூலம் உடல் தசைகளை வலிமைப்படுத்துவதால் உடலை பாதுகாப்புடன் வைக்கலாம்.

உடல் தசைகளை வலிமையாக்கும் சத்துக்கள்:

1)தாதுக்கள்
2)வைட்டமின்கள்
3)நார்ச்சத்துக்கள்
4)புரதங்கள்
5)ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ்

உடல் தசையை வலிமையாக்கும் உணவுகள்:

1.பால் மற்றும் பால் பொருட்கள்

பாலில் இருக்கின்ற புரதச்சத்து உடலுக்கு தேவையான வலிமையை வழங்குகிறது.பாலில் பாஸ்பரஸ்,பொட்டாசியம்,கால்சியம்,வைட்டமின்கள்,மெக்னீசியம் போன்றவை அதிகம் நிறைந்து காணப்படுகிறது.

அதேபோல் பால் பொருட்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை அதிகரிக்கும்.

2.பருப்பு உணவுகள்

பச்சை பயறு,துவரை,கொள்ளு போன்ற பயறு வகைகள் உடல் தசைகளை வலிமைப்படுத்தி உதவுகிறது.

3.பச்சை கீரை வகைகள்

வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை கீரை உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் தசைகள் வலிமையடையும்.

4.முட்டை

புரதச்சத்து நிறைந்த முட்டை உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் தசைகள் வலிமைபெறும்.

5.அசைவ உணவுகள்

ஆடு,கோழி போன்றவற்றில் புரதம் அதிகம் நிறைந்து காணப்படுகிறது.புரதச்சத்து நிறைந்த இந்த அசைவ உணவுகளை உட்கொண்டால் உடல் தசைகள் வலிமைபெறும்.

6.பழங்கள்

தினமும் ஒரு பழ வகைகள்,முளைக்கட்டப்பட்ட பயறுகளை சாப்பிட்டு வந்தால் உடல் தசைகள் வலிமைபெறும்.

7.உலர் பருப்புகள்

பாதாம்,முந்திரி,பிஸ்தா,வேர்க்கடலை போன்ற உலர் பருப்புகளை வறுத்து பொடித்து பாலில் கலந்து பருகி வந்தால் உடல் தசைகள் வலிமையாக இருக்கும்.