அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவை மிகுந்த பலாப்பழத்தில் இருந்து ஊரையே கூட்டும் அளவிற்கு வாசனை வீசும்.இந்த பலாப்பழம் கோடை காலத்தில் அதிகம் கிடைக்கிறது.பலாப்பழத்தில் வைட்டமின் ஏ,வைட்டமின் சி அதிகம் நிறைந்து காணப்படுகிறது.
இந்த பலாப்பழத்தில் ஜாம்,ஹல்வா போன்ற பல இனிப்பு உணவுகள் செய்யப்படுகிறது.பச்சை பலாக்காய் பிரியாணி செய்ய பயன்படுகிறது.பலாப்பழம் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த பழமாகும்.
இந்த பழத்தை போல் பலாமர இலையும் ஏகப்பட்ட நன்மைகளை கொண்டிருக்கிறது.பலாப்பழம் சாப்பிடுவதால் நமக்கு என்ன மருத்துவ குணங்கள் கிடைக்கும் என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
பலாப்பழத்தில் உள்ள அத்தியாவசிய சத்துக்கள்:
**பாஸ்பரஸ்
**துத்தநாகம்
**கால்சியம்
**புரதம்
**மாவுச்சத்து
**வைட்டமின் ஏ
**வைட்டமின் சி
**வைட்டமின் பி
பலாப்பழம் நன்மைகள்:-
1)பலாப்பழத்தை சாப்பிடுவதால் இரத்த குழாயில் இருக்கின்ற கெட்ட கழிவுகள் முழுமையாக வெளியேறும்.
2)பலாப்பழத்தை உட்கொண்டால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
3)சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை பலாப்பழம் சாப்பிடுவதன் மூலம் குணப்படுத்திக் கொள்ளலாம்.
4)இரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் பலாப்பழம் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
5)பலாப்பழம் சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
6)அதேபோல் பலாப்பழ இலையை பவுடராக அரைத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
7)பலா கொட்டையில் இருக்கின்ற ஊட்டசத்துக்கள் உடலில் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகிறது.
8)கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க பலா இலையை பொடித்து தண்ணீரில் கலந்து பருகலாம்.