2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் தங்களுடைய பரப்புரைகளையும் சுற்றுப்பயணங்களையும் மேற்கொள்வதற்கு ஆயத்தமாகி வரக்கூடிய சூழலில் திராவிட முன்னேற்ற கழகம் தற்பொழுது ஆளும் கட்சியாக இருப்பதோடு தங்களுடைய பதவி காலத்தின் கடைசி பட்ஜெட் தாக்கல் இன்று தங்கம் தென்னரசு அனைவர் மத்தியிலும் வெளிப்படுத்த இருக்கிறார்.
இதுகுறித்து பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நற்செய்திகள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை பழைய ஓய்வூதிய திட்டம் ஆசிரியர்களுக்கான நல்ல முடிவுகள் என பல்வேறு விஷயங்கள் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. 2025 26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தங்கம் தென்னரசு இன்று சரியாக 9.30 மணி அளவில் தாக்கல் செய்ய இருக்கிறார்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட சூழ்நிலையில் இவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாமல் இருப்பதை பலரும் சுட்டிக்காட்டி அவற்றை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் அரசு ஊழியர்களுக்கு சாதகமான பதில்களும் மகளிர்க்கு உரிமை தொகை இலவச பேருந்து இதுபோன்ற முக்கிய முடிவுகளில் மேம்படுத்த முக்கிய முடிவுகளில் இன்னும் சில மேம்படுத்தப்பட்ட முடிவுகள் ஆக மாற்றப்படும் என்றும் பழைய ஓய்வூதிய திட்டம் போன்றவற்றை செயல்படுத்தவில்லை என்றால் தாங்கள் கொடுத்த அரசியல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சென்று விட்டதாக கருதி தங்களுடைய வாக்கு வங்கி குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் இது குறித்த முக்கிய முடிவுகள் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.