உங்களிடம் மருத்துவ காப்பீட்டு அட்டை இல்லையா!! இனி கால தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும் மருத்துவம்!!

Photo of author

By Gayathri

உங்களிடம் மருத்துவ காப்பீட்டு அட்டை இல்லையா!! இனி கால தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும் மருத்துவம்!!

Gayathri

Don't you have a health insurance card? Now you can get immediate medical care without any delay!

தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை மத்திய அரசு உடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு செயல்படுத்தி வரக்கூடிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப்படுவதன் மூலம் இந்த அட்டைகளை வைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தங்களுக்கு தேவையான உயர் சிகிச்சைகளை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது ஒரு நபர் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை இல்லை என்றாலும் அவர்கள் செல்லக்கூடிய மருத்துவமனைகளில் அவர்களுக்கான சிகிச்சைகள் காலதாமதம் இன்றி உடனடியாக நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

2009 ஆம் ஆண்டு தமிழக அரசால் துவங்கப்பட்ட கலைஞர் காப்பீட்டு திட்டம் தற்பொழுது முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டமாக மேம்படுத்தப்பட்டு மத்திய அரசினுடைய பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா என்று திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. தற்பொழுது தமிழகத்தில் மட்டும் இந்த காப்பீட்டு திட்டங்கள் அரசு மருத்துவமனைகளான 855 மருத்துவமனைகளிலும், 990 தனியார் மருத்துவமனைகளிலும் என மொத்தமாக 1845 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு தமிழகத்தில் செயல்பட்டு வரக்கூடிய இந்த 1845 மருத்துவமனைகளிலும் ஒரு நபர் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை இல்லை என்றாலும் உடனடியாக மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும் என அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர்.

ஏனெனில் அவர்கள் ஆதரவின்றி தனியாக இருப்பதாலும் அவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை பெறுவது ஏதேனும் சிரமங்கள் ஏற்படலாம் என்றும் தங்களுக்கு உடல்நிலை முடியாத தருணத்தில் கூட தாங்களாகவே தனியாக மருத்துவமனைக்கு வந்திருக்கக் கூடியவர்களிடம் மருத்துவ காப்பீட்டு அட்டையை கேட்டு அவர்களுக்கு அலைச்சல் கொடுக்கக் கூடாது என்ற காரணத்தாலும் இனி தனிநபர் மருத்துவ காப்பீட்டு அட்டையை கேட்டு அவர்களுக்கு மருத்துவம் பார்ப்பதில் கால தாமதம் ஏற்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.