நேற்று நாடாளுமன்ற லோக்சபாவில் பேசிய திமுக எம்பி ராணி ஸ்ரீகுமார் அவர்கள் 4000 ஆண்டுகள் பழமையான நாகரீகம் எங்களுடைய நாகரீகம் என்றும் எங்களுக்கு நாகரீகத்தை யாரும் கற்றுக் கொடுக்க வேண்டாம் என்றும் பேசியிருக்கிறார்.
இவ்வாறு பேசிய திமுக எம்பி ராணி ஸ்ரீகுமாருக்கு பதில் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மிகுந்த கோபத்துடன் அவர்களுடைய ஆட்சியில் நடைபெற்ற மற்றும் திமுக அரசால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நாகரீகமற்ற செயல்களை பட்டியலிட்டு இருக்கிறார். ஒரு பெண்ணின் சேலையை பிடித்து இழுப்பது என்பது உங்களுடைய நாகரிகமா என்றும் யார் எழுத்தார் என்று நான் பெயர் குறிப்பிடாமல் இருப்பது நாகரீகமா ?? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டியலிட்ட திமுக அரசின் நாகரீகமற்ற செயல்கள் பின்வருமாறு :-
✓ 1989 தமிழ்நாடு சட்டசபை கூட்டம் மார்ச் மாதம் நடைபெற்ற பொழுது ஜெயலலிதா அம்மையார் அவர்களின் புடவை பிடித்து இழுக்கப்பட்டது.
✓ சமீப காலத்தில் நிகழ்ந்த அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம்
✓ திருச்சியில் 9 வயது மாணவியின் பாலியல் வன்கொடுமை
✓ தஞ்சாவூரில் 22 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்
✓ சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருக்கக்கூடிய கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட 68 மரணங்கள்
✓ தமிழ்நாட்டில் இதுவரை 28 ஆணவக் கொலைகள். ஜாதி மாறி செய்யப்பட்ட திருமணத்தால் நிகழ்ந்தவை
✓ போதை பொருள் வாங்க பணம் கேட்டு அம்மாக்கள் கொடுக்க மறுப்பதால் நிகழும் கொலைகள். போதைப்பொருள் புலக்கம் அதிகமாக இருக்கக்கூடிய தமிழ்நாடாக உருவெடுத்து நிற்பது
இது போன்ற பல செயல்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம் என்றும் 4000 வருடம் நாகரீகத்தைக் கொண்ட தமிழ்நாடு என்ற பெருமிதத்தை கூறக்கூடிய திமுகவினர் தற்பொழுது நாகரீகம் எவ்வளவு சீர்கெட்ட நிற்கிறது என்பதை கவனிக்க மறந்து விட்டதாகவும் பொதுவான ஓரிடத்தில் பெண்ணினுடைய சேலையைப் பிடித்து இழுப்பது நாகரீகமாய் என ஏன் யோசிக்கவில்லை என்றும் பல கேள்விகளை முன் வைத்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள்.