பாதாம் முந்திரியை விட அதிக சத்துக்கள் கொண்ட 5 விதைகள்!! விஷயம் தெரிந்தால் உடனே வாங்கி சாப்பிடுவீங்க!!

Photo of author

By Divya

பாதாம் முந்திரியை விட அதிக சத்துக்கள் கொண்ட 5 விதைகள்!! விஷயம் தெரிந்தால் உடனே வாங்கி சாப்பிடுவீங்க!!

Divya

ஆரோக்கியத்தை சீராக்க உலர் விதைகள் பெரிதும் உதவியாக இருக்கிறது.உலர் விதைகள் என்றால் பாதாம்,பிஸ்தா,முந்திரி என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் இந்த உலர் விதைகளைவிட அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

உலர் விதைகள்

1)ஆளி விதை
2)பூசணி விதை
3)சூரியகாந்தி விதை
4)துளசி விதை
5)சியா விதை

ஆளி விதை

இதில் கால்சியம்,பொட்டாசியம்,ஜிங்க் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.

இந்த ஆளி விதையை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஹார்மோன் சமநிலை ஏற்படும்.இதய ஆரோக்கியம் மேம்பட,மூட்டு வலிமையை அதிகரிக்க ஆளி விதை உட்கொள்ளலாம்.

செரிமானப் பிரச்சனை,முடி உதிர்வு,இதய ஆரோக்கியம்,ஞாபக சக்தி அதிகரிக்க உலர் விதைகளை உட்கொள்ளலாம்.

பூசணி விதை

இதில் ஜிங்க்,நார்ச்சத்து,மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த உலர் விதையை வறுத்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

உடல் எடை குறைய,முடி அடர்த்தி அதிகரிக்க,சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக பூசணி விதையை உட்கொள்ளலாம்.

சூரியகாந்தி விதை

இதில் வைட்டமின் ஈ,வைட்டமின் பி,வைட்டமின் பி6 உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.சூரிய காந்தி விதையை வறுத்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சருமப் பிரச்சனைகள் முழுமையாக அகலும்.முடி உதிர்வு,எடை இழப்பு போன்ற பாதிப்புகள் குணமாக சூரியகாந்தி விதையை உட்கொள்ளலாம்.

துளசி விதைகள்

இதில் இருக்கின்ற நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.இதில் கொலஸ்ட்ரால் சத்து மிகவும் குறைவு.இந்த துளசி விதையை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

தசைகளை வலிமைப்படுத்த உதவுகிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்கிறது.முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.

சியா விதை

இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.உடல் எலும்புகளை வலிமைப்படுத்த உதவுகிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

முடி உதிர்வு,சருமம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் முழுமையாக குணமாக சியா விதைகளை ஊறவைத்து சாப்பிடலாம்.