Breaking News, District News, Madurai, News

மாநகராட்சி விடுத்த எச்சரிக்கை!! பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்!!

Photo of author

By Gayathri

மதுரை : சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மதுரை மாநகராட்சி சார்பில் பல முக்கிய விஷயங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு நபர் பொது இடங்களில் குப்பை கொட்டினால் அந்த குப்பையை தானாகவே முன்வந்து 24 மணி நேரத்திற்குள் சுத்தம் செய்யவில்லை என்றால் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மதுரை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

அதன்படி, மதுரை மாநகராட்சியில் மாட்டுத்தாவணி உலகனேரி மதுரை உயர் நீதிமன்ற கிளை போன்ற இடங்களிலும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய நீர்நிலைகள் சாலையோரங்கள் மற்றும் கால்வாய்கள் போன்றவற்றில் குப்பைகளை கொட்டாமல் அவற்றினுடைய சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றும் இவை மதுரை மாநகராட்சியின் முதல் கட்டம் என்றும் தெரிவித்ததோடு இது மதுரை முழுவதும் செயல்படுத்தப்படும் என்றும் மதுரை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

யாராவது இது போன்ற இடங்களில் குப்பைகளை கொட்டினால் தானாகவே முன்வந்து அந்த குப்பைகளை சுத்தம் செய்து விட வேண்டும் என்றும் அதை மீறுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் மதுரை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மாநகராட்சி இந்த முடிவை எடுத்திருப்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்டது எனவும் இதனை அனைத்து பொதுமக்களும் புரிந்து கொண்டு தங்களுடைய சுற்றுச்சூழலை சுத்தமாகவும் சுகாதாரத்தோடும் பேணி பாதுகாக்க வேண்டும் என்றும் மதுரை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஊட்டி கொடைக்கானல்.. ஒரு நாளைக்கு குறிப்பிட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதி!! உயர் நீதிமன்ற கட்டுப்பாடு!!

பிரதமரின் சூரிய வீடு.. ரூ.78,000 வரை மானியம்!! உடனே விண்ணப்பிக்க இதை செய்யுங்கள்!!