மீண்டும் அமலுக்கு வரும் MDR கட்டணம்!!UPI மற்றும் RuPay பரிவர்த்தனைகளில் ஏற்படும் சிக்கல்!!

Photo of author

By Gayathri

மீண்டும் அமலுக்கு வரும் MDR கட்டணம்!!UPI மற்றும் RuPay பரிவர்த்தனைகளில் ஏற்படும் சிக்கல்!!

Gayathri

MDR charges to be re-imposed!! Problems with UPI and RuPay transactions!!

MDR பரிவர்த்தனை கட்டணங்களை 2022 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்த நிலையில் மீண்டும் அதனை புழக்கத்திற்கு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் அதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வெளியான தகவல்களின்படி யுபிஐ மற்றும் ரூபே பேமென்ட் களுக்கான சேவை கட்டணங்கள் 2022 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அதனை பயன்பாட்டிற்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இது குறித்த முன்மொழிவை தொழில்துறை மத்திய அரசிடம் சமர்ப்பித்து இருப்பதாகவும் மத்திய அரசு இதனை பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசா மாஸ்டர் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு போன்ற பரிவர்த்தனைகளுக்கு ஏற்கனவே பல பெரிய நிறுவனங்கள் MDR கட்டணங்களை பெற்று வரக்கூடிய நிலையில் அதனை தொடர்ந்து UPI மற்றும் ரூபே போன்றவற்றிற்கும் கட்டணங்கள் பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு செய்வதன் மூலம் பண பரிவர்த்தனை செய்யக் கூடியவர்களுக்கு பெரிதளத்தில் பாதிப்பு இருக்காது என்றும் இதன் மூலம் லாபமிட்ட கூடிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் இதற்கான சிறிய அளவிலான கட்டணங்களை செலுத்த நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்த பரிவர்த்தனைகளை வைத்து லாபம் ஈட்டக்கூடிய பல பெரிய நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய சரிவாக அமைவதற்கு வாய்ப்புகள் உள்ளது என பல விஞ்ஞானிகள் தரப்பில் கருத்துகள் தெரிவிக்கப்படுகிறது.