நாளை ( மார்ச் 15 ) இந்தியா முழுவதும் உள்ள சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹிந்தி தேர்வு நடைபெற இருப்பதால் ஹோலி பண்டிகையின் காரணமாக இந்த தேர்வில் கலந்து கொள்ள முடியாத மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று சிபிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த முக்கிய முடிவு குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் கூறியிருப்பதாவது :-
இந்தியாவில் பல பகுதிகளில் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படக்கூடிய சூழலில், ஒரு சில இடங்களில் மார்ச் 15 ஆகிய நாளை ஹோலி பண்டிகை கொண்டாட இருப்பதாகவும் இன்னும் ஒரு சில இடங்களில் இந்த கொண்டாட்டங்கள் மார்ச் 15ஆம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டு இருப்பதாலும் 12 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்கள் தங்களுடைய ஹிந்தி தேர்வினை எழுத முடியாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அவ்வாறு எழுதாமல் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.
அதன்படி, மார்ச் 15ஆம் தேதி தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடிய மாணவர்களால் தேர்வு எழுத முடியாது என்பதால் அவர்களுக்காக மாற்று தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த தேதிகளிலேயே ஹோலி பண்டிகையை கொண்டாடி தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்கள் தங்களுடைய தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படுவர் என்றும் சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிபிஎஸ்இ உடைய முடிவானது 12 ஆம் வகுப்பு ஹிந்தி தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக மாறி இருக்கிறது.