DMK: திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுகளில் முடிவடைய உள்ள நிலையில் தற்போது வரை அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை. தொடர்ந்து இதனை தவிர்த்து வருகிறது. ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்களிலும் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்து ஏமாற்றத்தையே சந்திக்கின்றனர். அதிலும் குறிப்பாக இதுதான் கடைசி பட்ஜெட் தாக்கல் என்பதால் இதில் கட்டாயம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அவர்களுக்கெல்லாம் பெருத்த ஏமாற்றம்தான் கிடைத்தது. அதாவது பட்ஜெட் தாக்குதலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக தெரிவித்திருந்தது. இது குறித்து அரசிடம் அரசு ஊழியர்கள் குழு பலமுறை ஆலோசனை நடத்தியும் பயனளிக்கவில்லை. இந்த முறையாவது கட்டாயம் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், புதிய ஓய்வூதிய திட்டம் தான் என்பது இந்த பட்ஜெட் மூலம் தெரிய வந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும் புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியிருந்தனர். ஆனால் இது பழைய ஓய்வூதிய திட்டத்தை காட்டிலும் குறைவற்ற பயனையே தர உள்ளது . இதனால் இது வேண்டாமென்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆச்சிரியர்கள் என அனைவரும் தவிர்த்து கண்டனம் தெரிவித்தனர். ஆனால் திமுக தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தற்போது வரை காலம் தாழ்த்தி வருகிறது. இவ்வாறு ஆளும் கட்சி செய்வது சட்டமன்ற தேர்தலில் இவர்களுக்கு பின்னடைவை கொடுக்கும்.