அடிக்கடி கால் வீங்குதா? கொஞ்ச தூரம் நடந்தாலே குமட்டுதா? அப்போ இந்த உறுப்பு ஆபத்தில் இருக்குனு அர்த்தம்!!

Photo of author

By Divya

அடிக்கடி கால் வீங்குதா? கொஞ்ச தூரம் நடந்தாலே குமட்டுதா? அப்போ இந்த உறுப்பு ஆபத்தில் இருக்குனு அர்த்தம்!!

Divya

சிலருக்கு நடந்தாலோ அல்லது கால்களை தொங்கிய நிலையில் வைத்திருந்தாலோ கணுக்கால் பகுதியில் அதிகமாக வீக்கம் ஏற்படும்.அதேபோல் சிறிது தூரம் நடந்தாலே குமட்டல் பிரச்சனை ஏற்படும்.இதுபோன்ற பிரச்சனை இருப்பவர்கள் மெடிக்கலில் மாத்திரை வாங்கி உட்கொண்டு சரி செய்து கொள்ளும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இதுபோன்ற அறிகுறிகள் சிறுநீரக செயலிழக்கப்போகிறது என்பதை உணர்த்துகிறது.பொதுவாக சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால் ஆரம்ப நிலையில் கண்டறிவது என்பது மிகவும் கடினம்.60 முதல் 70% சிறுநீரகம் செயலிழந்த பின்னர் தான் அவற்றின் அபாயத் தன்மையை உணர முடியும்.இதன் காரணமாகே பெரும்பாலானோர் சிறுநீரக செயலிழப்பின் இறுதி கட்டத்தில் மருத்துவரை அணுக வேண்டிய நிலை ஏற்படுகிறது.சிறுநீரக செயலிழப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளது.

1)போதிய அளவு தண்ணீர் பருகாமை
2)சிறுநீரை அடக்கி வைத்தல்
3)சிறுநீர் பாதை தொற்று

சிறுநீரக செயலிழப்பு அறிகுறி:-

1)சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் வலி
2)அதீத உடல் சோர்வு
3)வாந்தி மற்றும் குமட்டல் உணர்வு
4)சுவாசப் பிரச்சனை
5)உயர் இரத்த அழுத்தம்
6)தோல் அரிப்பு

மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டாலும் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.சிறுநீரக செயலிழப்பு ஏற்படாமல் இருக்க நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைளில் ஈடுபடுவது நல்லது.

தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.குறிப்பாக மாலை 5 முதல் 6 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அதிகளவு தண்ணீர் பருக வேண்டும்.

அதேபோல் சிறுநீரை அடக்கி வைக்காமல் வெளியேற்ற வேண்டும்.தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகத்தில் தேங்கியிருக்கும் கழிவுகள் விரைவில் வெளியேறிவிடும்.அதேபோல் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது கட்டுப்படும்.

சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை உணர்ந்தால் அலட்சியம் செய்யாமல் உரிய பரிசோதனை மேற்கொள்வது நல்லது.