உங்கள் நகம் என்ன கலர்ல இருக்குனு பாருங்க!! இந்த நிறத்தில் இருந்தால் ஆபத்தாம்!!

Photo of author

By Divya

உங்கள் நகம் என்ன கலர்ல இருக்குனு பாருங்க!! இந்த நிறத்தில் இருந்தால் ஆபத்தாம்!!

Divya

நமது நகங்கள் வெறும் அழகிற்காக மட்டும் வளர்க்கப்படுவதில்லை.நகத்தை நாம் பராமரிப்பதை பொறுத்து நமது உடல் ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகிறது.நகத்தில் ஏதேனும் மாற்றம் தென்பட்டால் அவற்றை அலட்சியமாக எண்ணிக் கொள்ளக் கூடாது.

நகத்தில் வெண் புள்ளிகள்,நகம் நிறத்தில் மாற்றம் போன்றவை உடல் நலக் கோளாறுகளை குறிக்கிறது.உங்கள் நகத்தின் மீது வெள்ளையாக இருந்தால் உடலில் இரத்தம் குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.நகத்தின் நடுவில் பள்ளம் ஏற்பட்டால் வயதாகிவிட்டது என்று அர்த்தம்.

வெளிர் நகங்கள் நுரையீரல்,இதயம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.நகத்தின் நடு பகுதியில் வெண்மையாகவும் நகத்தின் முனையில் கருப்பாகவும் இருந்தால் கல்லீரல் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

நகத்தின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருந்தால் பூஞ்சை தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.மஞ்சள் நிற நகங்கள் நுரையீரல் பாதிப்பு,தைராய்டு பாதிப்பு இருப்பதை உணர்த்துகிறது.

நகங்கள் நீல நிறத்தில் இருந்தால் அவை சொத்தையாகிவிட்டது என்று அர்த்தம்.நீல நிற நகங்கள் நுரையீரல் பிரச்சனைக்கான அறிகுறியாக இருக்கலாம்.பிளவுபட்ட நகங்கள் தைராய்டு பாதிப்பு இருப்பதை உணர்த்துகிறது.

நகங்களை சுற்றி வீங்கி இருந்தால் நகசுத்தி இருக்கிறது என்று அர்த்தம்.நகத்தில் கருப்பு கோடு இருந்தால் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.நகங்கள் வளைந்து இருந்தால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது என்று அர்த்தம்.

நகங்களில் செங்குத்து கோடுகள் தென்பட்டால் அவை கால் வீக்கம்,சிறுநீரகப் பிரச்சனை போன்றவை இருப்பதை உணர்த்துகிறது.நகத்தில் இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்.அதேபோல் நகத்தில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.நகங்களை வெட்டி சுத்தம் செய்து முறையாக பராமரிக்க வேண்டும்.