சிறுமீன்கள் முதல் திமிங்கிலங்கள் வரை சிக்கும்: விஜய் அறிக்கையால் அலறும் திமுக!

Photo of author

By Vijay

சிறுமீன்கள் முதல் திமிங்கிலங்கள் வரை சிக்கும்: விஜய் அறிக்கையால் அலறும் திமுக!

Vijay

நடிகரும், தமிழக வெற்றிக்கழக  தலைவர் விஜய், திமுக அரசின் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை கடுமையாக விமர்சித்து, 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் அவர்களை கண்டிப்பாக நிராகரிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் டாஸ்மாக் நிறுவனங்கள் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது அம்பலமானதாகக் கூறினார். மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பாட்டிலிங் நிறுவனங்கள் சேர்ந்து திட்டமிட்டு பணமோசடி செய்துள்ளன என்றும், திமுக அரசு இதற்குப் பூரண ஆதரவு அளித்துள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.

“மக்கள் நலத்திட்டங்களை பெருமையாக பேசும் திமுக அரசு, உண்மையில் மக்களை மதுவிற்கு அடிமையாக்கி, ஊழல் மூலம் கோடிக்கணக்கில் பணம் சேர்க்கும் பணியில் மும்முரமாக உள்ளது. இதுபோன்ற மோசடிகளை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். 2026 தேர்தலில் திமுகவை கண்டிப்பாக நிராகரிக்கவும், முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மக்கள் தயாராக இருக்கிறார்கள்,” என்று விஜய் உறுதியாக தெரிவித்துள்ளார்.

அமலாக்கத் துறை நடத்திய சோதனை வெறும் ஆரம்ப கட்டமே என்றும், இன்னும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டால் மிகப்பெரிய அளவிலான மோசடி வெளிச்சத்துக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். “ஊழல் செய்வதில் திமுக அரசு முதன்மை வகிக்கிறது. ஆனால், யார் இருந்தாலும் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டால், அவர்கள் நியாயமான விசாரணைக்கு உட்பட்டு, தண்டனை பெற்றே ஆக வேண்டும்,” என்று கூறினார்.

மேலும், திமுக அரசின் வெற்று விளம்பர அரசியல் இனி மக்களிடையே செல்லாது என்றும், ஓட்டுக்கு எந்தளவுக்கு பணம் கொடுத்தாலும், உண்மையை புரிந்த மக்கள், எதிர்வரும் சட்டசபை தேர்தலில் திமுகவை தோற்கடிப்பார்கள் என்றும் விஜய் தெரிவித்தார். “மக்கள் இனி ஏமாற மாட்டார்கள். 2026 தேர்தல் திமுக அரசுக்கு ஓர் அவலம் நிறைந்த தேர்வாக மாறும்!” என்று அவர் கூறினார்.