இரவு நேரத்தில் உடலில் அந்த இடத்தில் எண்ணெய் ஊற்றி தேய்த்தால் நடக்கும் அதிசயம்!! தெரிந்தால் மிஸ் பண்ணவே மாட்டீங்க!!

Photo of author

By Divya

இரவு நேரத்தில் உடலில் அந்த இடத்தில் எண்ணெய் ஊற்றி தேய்த்தால் நடக்கும் அதிசயம்!! தெரிந்தால் மிஸ் பண்ணவே மாட்டீங்க!!

Divya

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து உடலுக்கு எண்ணெய் வைக்கும் பழக்கம் கடைபிடிக்கப் படுகிறது.உடலுக்கு ஆயில் மசாஜ் செய்வதால் சூடு,கண் தொடர்பான பிரச்சனைகள்,வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

தலை முதல் பாதம் வரை எந்த இடத்தில் எந்த எண்ணெய் ஊற்றி தேய்த்தால் பலன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.கண் சூடு,கண் எரிச்சல் பிரச்சனை இருப்பவர்கள் இரவு தூங்கும் நேரத்தில் கண்களை சுற்றி விளக்கெண்ணெய் வைத்து மசாஜ் செய்துவிட்டு படுத்தால் பிரச்சனை சரியாகும்.

தலை சூடு இருப்பவர்கள் உச்சந்தலையில் நல்லெண்ணெய் சிறிது ஊற்றி தேய்த்து மசாஜ் செய்தால் சூடு தணியும்.இதனால் உடலில் பித்தம் குறையும்.அதேபோல் தொப்புளில் பாதாம் எண்ணெய் ஊற்றி தேய்த்தால் மூட்டு வலி பாதிப்பு குணமாகும்.

விளக்கெண்ணையை தொப்புளில் ஊற்றி தேய்த்தால் மலச்சிக்கல்,நரம்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.வேப்ப எண்ணையை தொப்புளில் ஊற்றி மசாஜ் செய்தால் சருமம் சம்மந்தபட்ட பாதிப்புகள் குணமாகும்.

முகப்பரு,கரும்புள்ளிகள் நீங்க தொப்புளில் வேப்ப எண்ணெய் ஊற்றி மசாஜ் செய்ய வேண்டும்.சுத்தமான நெய்யை தொப்புளில் ஊற்றி மசாஜ் செய்தால் செரிமான மண்டல ஆரோக்கியம் மேம்படும்.தேங்காய் எண்ணையை தொப்புளில் ஊற்றி தேய்த்தால் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் முழுமையாக குணமாகும்.

விளக்கெண்ணையை தொப்புளில் ஊற்றி தேய்த்தால் மாதவிடாய் வலி,உடல் சூடு போன்ற பாதிப்புகள் குணமாகும்.தேங்காய் எண்ணெயை சருமத்தில் அப்ளை செய்து வந்தால் சுருக்கம்,வறட்சி போன்ற பாதிப்புகள் குணமாகும்.

தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் வைத்தால் முடி உதிர்வு,முடி வெடிப்பு,இளநரை,தலை சூடு போன்ற பாதிப்புகள் குணமாகும்.தினமும் குளிப்பதற்கு முன்னர் ஏதேனும் ஒரு எண்ணையை தலைக்கு ஊற்றி தேய்த்தால் முடி ஆரோக்கியம் மேம்படும்.தலைவலி,தலைபாரம் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.